அதிமுக முன்னாள் சுகாதாராத்துறை அமைச்சர் திமுகவில் இணைந்தார்!

 

அதிமுக முன்னாள் சுகாதாராத்துறை அமைச்சர் திமுகவில் இணைந்தார்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 8 மாத காலத்தில் வர உள்ளது. இதற்கான பணிகளை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் துவங்கிவிட்டன. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்ட நிர்வாகிகள் நியமிப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக செய்து வருகிறது .

அதிமுக முன்னாள் சுகாதாராத்துறை அமைச்சர் திமுகவில் இணைந்தார்!

தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் இந்த பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் முடிந்த அளவு அதற்கான பணிகள் காணொளி காட்சிகள் மூலம் நடைபெற்று வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகள், கட்சித் தாவல்கள் உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் நிகழ்வது இயல்பு.

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ். விஜய் திமுகவில் இணைந்துள்ளார். ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வேலூரை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய்.

அதிமுக முன்னாள் சுகாதாராத்துறை அமைச்சர் திமுகவில் இணைந்தார்!

முன்னதாக திமுகவில் உதயநிதி ஸ்டாலின் – கு. க. செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து மோதலில் செல்வம் பாஜக பக்கம் சாய்ந்ததால் அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.