2023 ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு – எந்த மாநிலத்தில் தெரியுமா?

 

2023 ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு – எந்த மாநிலத்தில் தெரியுமா?

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஜல்ஜீவன் இயக்கம் மூலம் அரசு குடிநீர் குழாய் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் செய்தி குறிப்பொன்றில், இந்தத் திட்டத்தின் மூலம் 2023 ஆண்டுக்குள் அம்மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு அளிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

அந்தச் செய்திக்குறிப்பில், ‘அருணாச்சலப் பிரதேசத்தில் 2000 அடி உயரத்தில் பசுமையான சூழலில் அமைந்துள்ள செரின் கிராமம் குதூகலமடைய எல்ல வகையான காரணங்களும் உள்ளன. ஏனெனில், செரின் கிராமத்துக்கும், நல்ல சாலைக்கும் இடைப்பட்ட தூரம் 22 கி.மீட்டர். இந்தக் கிராமத்தில் விசி பழங்குடியினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 130. இதற்கு முன்பு , இக்கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு , குறிப்பாக முதியோருக்கு தண்ணீர் எடுத்து வருவது மிகப்பெரிய கடினமான வேலையாக இருந்து வந்தது. அவர்கள் அருகில் உள்ள நீரோடையில் தண்ணீர் பிடிக்க வேண்டியிருந்தது. இப்போது, செரின் குடிநீர் விநியோகத் திட்டத்தின் பயனாக, ஒவ்வொரு வீட்டிலும் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

2023 ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு – எந்த மாநிலத்தில் தெரியுமா?

அரசின் விருப்பத்துக்குரிய முக்கியமான திட்டமான ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ், அருணாச்சலப் பிரதேச அரசு, மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் 2023 –ஆம் ஆண்டுக்குள் 100 சதவீத குழாய் இணைப்பு வழங்க முடிவு செய்துள்ளது.

மலைகள் சூழ்ந்த மாநிலமாக இருப்பதால், அருணாச்சலப் பிரதேசத்தில் புவியீர்ப்பு அடிப்படையில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. சமவெளிப் பகுதியிலிருந்து தண்ணீரை சேமிக்க கட்டுமானம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து வீடுகளுக்குக் குழாய் இணைப்பு கொடுக்கப்படுகிறது. அதில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. முந்தைய காலங்களில், தனிநபர் நுகர்வுக்கான செலவு அதிகமாவதைக் கருத்தில் கொண்டு, குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதில்லை. ஜல்ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்ட பின்னர், தரமான குடிநீர் வழங்குவதற்கான சுத்திகரிப்பு நிலையங்கள் இத்திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகி விட்டன.

2023 ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு – எந்த மாநிலத்தில் தெரியுமா?

இந்த எல்லைப்புற மாநிலத்தில், செரின் கிராமம் மட்டும் எடுத்துக்காட்டாக இருக்கவில்லை. அப்பர் சியாங் மாவட்டத்தின் தல்பிங் கிராமம் மற்றுமொரு உதாரணமாகும். 3,300 அடி உயரத்தில் உள்ள 79 வீடுகளில் மொத்த மக்கள் தொகை 380 ஆகும். சமுதாய அணி திரட்டலுக்கு இது சிறந்த உதாரணமாகும்.

லாங்டிங் மாவட்டத்தில் உள்ள புமாவோ என்ற மற்றொரு கிராமம் 3,900 அடி உயரத்தில் உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு எல்லையில் உள்ள இக்கிராமத்தில் , தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், தண்ணீர் விநியோகம் இல்லாத காரணத்தால், அவற்றைப் பயன்படுத்த மக்கள் தயங்கி வந்தனர். தற்போது, அவர்களது வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுவதால், அவர்கள் கழிப்பறைகளை மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வருகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.