“எச்சில் இலை; நடுத்தெரு” உண்மையாகி போன தேமுதிக தொண்டனின் ஆதங்கம்…!!

 

“எச்சில் இலை; நடுத்தெரு”  உண்மையாகி போன தேமுதிக தொண்டனின் ஆதங்கம்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக தொடங்கியுள்ளனர். ஆனால் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தனித்து விடப்பட்டுள்ளது. சசிகலா விடுதலையாகி சென்னை வந்த நிலையில் அவருக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து கூறியுள்ளார். இது அதிமுக தரப்பில் கடுப்பைக் கிளப் அவரது தம்பி, நாங்கள் ஒன்றும் கூட்டணிக்காக அலையவில்லை .அவர்கள் தான் கூட்டணி வைக்க பின்னால் வருகிறார்கள் என்று கூறினார். இதனால் கடுப்பான அதிமுக தலைமை, தேமுதிகவை புறந்தள்ளியது. பாமகவுக்கு 23 சீட்டுகள், பாஜகவுக்கு 20 சீட்டுகள் அளித்து தேமுதிகவை வெறுப்பேற்றியது அதிமுக .இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அறிவித்தது. அத்துடன் கே.பி முனுசாமி தலையீடு தான் இந்த அளவிற்கு எங்களை கொண்டு வந்து விட்டுள்ளது என்றும் அவர் பாமக ஸ்லீப்பர் செல் என்றும் குற்றம்சாட்டினர்.

“எச்சில் இலை; நடுத்தெரு”  உண்மையாகி போன தேமுதிக தொண்டனின் ஆதங்கம்…!!

திமுக கூட்டணிக்கு செல்லலாம் என திட்டமிட்டேன் தேமுதிகவுக்கு ஆரம்பத்திலேயே தடை போட்டார் ஸ்டாலின். அத்துடன் கமலின் கட்சி அழைக்க நோ சொன்ன தேமுதிக, அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால்117 தொகுதிகள், துணை முதல்வர் நாற்காலி டீல் பேசியதால் தினகரனும் பேக் அடித்துள்ளார்.இதனால் அரசியலில் தனித்து விடப்பட்டுள்ளது தேமுதிக.

முன்னதாக பிரபல நாளிதழில் வெளியிடப்பட்ட தேமுதிக தொண்டரின் கடிதம் பற்றி நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அது மீண்டும் உங்கள் கவனத்திற்கு…” தேமுதிக தொண்டர் ஒருவர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அற்பத் தொகைக்காக அரிய பொருளை அடகு வைப்பது போல, நீங்கள் இந்தக் கட்சியை அடகுப்பொருளாக்கிவிட்டீர்கள்! “எங்களை எப்போது அழைக்கப்போகிறீர்கள்? உடனடியாக அழையுங்கள் காலதாமதம் செய்யாதீர்கள்” என நித்தம் நித்தம் நீங்கள் அதிமுகவை வேண்டுவது கண்டு, நாங்களெல்லாம் புழுங்கிச் சாகிறோம். கேப்டன் விஜயகாந்த் ஆரம்பித்த கட்சிக்கு இந்த அவல நிலையா? – என வாய்விட்டு அழமுடியாத நிலையில் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

“எச்சில் இலை; நடுத்தெரு”  உண்மையாகி போன தேமுதிக தொண்டனின் ஆதங்கம்…!!

அத்துடன் அந்த கடிதத்தில், ” கேப்டன் கட்சியை, எச்சில் இலை எப்போது வெளியே வந்து விழும் என நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்துக் கொண்டிருக்கும் பிராணி நிலைக்கு கீழே தள்ளி விட்டு விட்டீர்களே. பாமக. தலைவரை அமைச்சர்கள் இதுவரை ஓடி ஓடி பலமுறை சந்தித்துள்ளனர். நோட்டா அளவுகூட, தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க முடியாத பாஜக தலைவரை மதுரைக்குத் தேடிச் சென்று பார்க்கிறார்கள்” என்றும் 2011 தேர்தலில் கேப்டனுக்காகக் காத்திருந்து, தேர்தல் உடன்பாடு கொண்ட ஜெயலலிதா, சட்டமன்றத்தில், விவாதம் ஒன்றில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் – கேப்டனுக்கும் இடையே வாக்குவாதம்முற்ற, ஆளும் கட்சியினர் கேப்டனை நோக்கி சப்தமிட, கேப்டன் ஜெயலலிதா முன்னிலையிலேயே எழுந்து, நாக்கைத் துருத்தி – அவர்களை எச்சரித்ததும், கேப்டன் உட்பட அனைவரையும் அவையை விட்டு வெளியேற்றுமளவு காரசார விவாதத்தை நடத்தினார். அவரது கட்சிக்கா இந்த ஈனநிலை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“எச்சில் இலை; நடுத்தெரு”  உண்மையாகி போன தேமுதிக தொண்டனின் ஆதங்கம்…!!

தொடர்ந்து அந்த கடிதத்தில், கேப்டன் நல்ல உடல்நிலையோடு இருந்திருந்தால் அதனை ஏற்றிருப்பாரா? கேப்டன் தலைமையில் தலைநிமிர்ந்து நின்ற கட்சிக்கு, இப்போது ஏற்பட்டுள்ள கேவலநிலை தேவையா? நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நிலையும் கேப்டனுக்கு மட்டுமல்ல; எங்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது என்று தனது பெயரை உண்மையுள்ள, கேப்டனின் அபிமானி என்று குறிப்பிட்டுள்ளார்.

தெளிவற்ற அரசியல் முடிவுகள் தேமுதிகவை அதளபாதாளத்திற்கு தள்ளிவிட்டது என்பது இந்த கடிதம் மூலமும், தற்போது நடைபெறும் நிகழ்வுகள் மூலமும் தெளிவாக தெரியவருகிறது.