சீர்காழி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

சீர்காழி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

மயிலாடுதுறை

சீர்காழி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கடவாசல் பகுதியை சேர்ந்தவர் தீபா (26). பி.எஸ்சி வரை படித்துள்ள இவருக்கு, சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று தீபா குடிநீர் பிடிப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள குடிநீர் குழாய்க்கு சென்றுள்ளார். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த பாமா, பிரபுதாஸ் ஆகியோருடன், தீபாவிற்கு தகராறு ஏற்பட்டு உள்ளது.

சீர்காழி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அப்போது, பாமாவும், பிரபுதாசும் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையிடம் உன்னை குறித்து கூறி, திருணமத்தை நிறுத்திவிடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தீபா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தீபாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தீபாவை தற்கொலைக்கு தூண்டியதாக பாமா, பிரபுதாஸ் மீது வழக்குப்பதிவு செய்த புதுப்பட்டினம் போலீசார், இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் பிடிக்கும் தகராறில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.