நான் கவனித்தவுடன் வேட்டியை மூடிவிட்டு..பெண் பத்திரிகையாளர் முன் ஓலா டிரைவர் செய்த வேலை

 
o

பெங்களூருவில் ஆங்கில நாளிதழில் பணிபுரிந்து வரும் அந்த இளம் பத்திரிகையாளர் வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு செல்ல வழக்கம் போல ஓலா கார் புக் செய்திருக்கிறார்.  அவர் புக் செய்து வந்த ஓலா காரில் ஏறி சென்றிருக்கிறார்.

 அந்த டிரைவர் காரை ஓட்டிக்கொண்டே சுய இன்பம் செய்து இருக்கிறார்.  இதை பின்சீட்டில் அமர்ந்திருந்த பெண் பத்திரிகையாளர் பார்த்துவிட்டு பதறியிருக்கிறார். இதற்கு மேல் இந்த காரில் இருந்தால் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று அந்த பெண் பத்திரிக்கையாளர் நினைத்திருக்கிறார்.  

அந்த பெண் பத்திரிக்கையாளர் பார்த்ததும் எதுவும் தெரியாததுபோல் வழக்கம்போல கார் ஓட்டிக் கொண்டு இருந்திருக்கிறார் டிரைவர்.  ஆனால் சத்தம் போட்டு காரை நிறுத்த சொல்லிவிட்டு,  உடனே வேற ஒரு கார் புக் செய்து வீட்டிற்கு சென்றிருக்கிறார் அந்தப் பத்திரிகையாளர்.

ஒல்

 நான் கவனிக்கவில்லை என்று நினைத்து  சுய இன்பம் செய்து கொண்டிருந்தார்.  நான் கவனித்தது தெரிந்ததும் வேட்டியை மூடிவிட்டு  எதுவும் நடக்காதது போல் அவர் காரை ஓட்டினார்.  அதற்கு மேல் நான் பாதுகாப்பு இல்லாததை உணர்ந்தேன்.   உடனே நான் சத்தம் போட்டு வண்டியை நிறுத்தச் சொன்னேன்.  அந்த இரவு நேரத்தில் தெரு விளக்கு மட்டுமே  துணை இருந்தது.  

 தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வேறு ஓலா வரும் வரைக்கும் காத்திருந்தேன்.   ஓலா வந்ததும்  வீட்டிற்கு சென்றேன்.  அந்த நேரத்தில்  அந்த ஆளிடம் இருந்து தப்பிக்க தான் நினைத்தேனே தவிர அவசர என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

 இதுகுறித்து அவர் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட நிலைமையை  வலைத்தளத்தில் பதிவு செய்ய,  பலரும் அந்த டிரைவரின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்க,  விவரம் தெரிந்த ஓலா நிறுவனம் சம்பந்தப்பட்ட டிரைவரை சஸ்பெண்ட் செய்து விட்டதாக தெரிவித்திருக்கிறது.

விபரம் அறிந்த  காவல்துறை ஆணையர் கமல் பந்த் ,   நடந்த சம்பவத்திற்கு  வருந்துகிறோம்.   உங்கள் புகார் அப்படியே உரிய முறையில் கவனிக்கப்பட்டு விசாரிக்கப்படும்.   குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது .   விரைவில் அவர்கள் குற்றவாளிகளைப் பிடித்து விடுவார்கள் . ஓலா நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பெண்ணுக்கு உறுதியளித்திருக்கிறார்.