6வது புருசனை தூண்டிவிட்ட பெண் - 5வது புருசன் குத்திக்கொலை

 
ழ்க்ஷ்

அந்தப் பெண்ணின் ஆறாவது புருஷன் ஐந்தாவது புருஷனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.  வயது 17 தான் என்பதால்  சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

 சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அடுத்த புதூர் பள்ளிக்கூடம் பகுதியில் வசித்து வந்தவர் செல்லவேல்.   36 வயது ஆன செல்லவேலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. லாரி டிரைவரான இவர் கடந்த 7-ஆம் தேதியன்று இரவு 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மேல் காவிரி கிராஸ் பகுதியில் மேற்கு கரை கால்வாய் அருகே சென்றபோது அவரை மர்ம நபர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது.

ழ்க்ஷ்

 இதையடுத்து  மேட்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.    இந்த கொலை எப்படி நடந்து இருக்கலாம் என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்த போது மேட்டூர் தங்கமாபுரி பட்டணம் பகுதியைச் சேர்ந்த அழகம்மாள் என்பவருடன் செல்லவேலுவுகு பழக்கம் இருந்ததை சிலர் சொல்லியிருக்கிறார்கள். 

 40 வயது அழகம்மாளுக்கு   நான்கு கணவர்கள்.  சரவணன், வேலு ஆறுமுகம் ,விக்கி என்ற  4 பேரை திருமணம் செய்திருக்கிறார்.   இதில் சரவணனுக்கு பிறந்த குழந்தைகள் 3 பேர் உள்ளனர்.   விக்கி உடன் குடும்பம் நடத்தி வந்த போதுதான் அழகம்மாளுக்கும் செல்லவேலுவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.   லாரி டிரைவர் என்பதால் அவர் திருமணமாகாதவர் என்பதால் விக்கியை விட்டு பிரிந்து  செல்லவேலுடன் ஒரே வீட்டில் கடந்த ஆறு மாதங்களாக குடும்பம் நடத்தி வந்திருக்கிறார் அழகம்மாள்.

 இந்த நிலையில் செல்லவேலுவிடம் கிளீனராக வேலை பார்த்து வந்திருக்கிறார் குண்டுகல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன்.   அந்த 17 வயது சிறுவனுடன் அழகம்மாளுக்கு நெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது.   செல்லவேலு  இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.  அப்படி ஒருநாள் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்த போது அதை செல்லவேலு நேரில் பார்த்திருக்கிறார்.

க்ஷ்ழ்

 இருவரையும் கண்டித்த அவர்,  இனி ஒருமுறை இப்படி நடந்து கொண்டால் உன் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி விடுவேன் என்று அந்த சிறுவனை எச்சரித்திருக்கிறார். இதன் பின்னர் செல்லவேலு அவர்களை கண்டுகொள்ளவில்லை.   ஆனாலும் எங்கே தங்களை ஏதும் செய்து விடுவாரோ அசிங்கப்படுத்தி விடுவாரோ என்று  அழகம்மாளும் அந்த சிறுவனும்  யோசித்து வந்துள்ளனர். 

 இதனால் கொலை செய்து விடுவதே நல்ல முடிவு என்று அவர்களிருவரும் முடிவெடுத்திருக்கிறார்கள் இதை அடுத்து அவளிடம் சொல்லிவிட்டு சென்ற சிறுவன் செல்லவேலுவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.

அழகம்மாள் மூலமாக இது  தெரிய வர,  சிறுவனின் வீட்டை சுற்றி வளைத்த போலீசார் அவரை கைது செய்து சேலத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.    இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.