சீக்கிரமே வீட்டுக்கு வந்ததால் ஓட்டுநருக்கு நேர்ந்த கதி - காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்

 
ka

கன்னியாகுமரி மாவட்டத்தில் நித்திரவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.  இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வரும் ராஜ்குமார் லாரி ஓட்டுனர் என்பதால் அடிக்கடி வெளியூருக்குச் சென்று  விடுவது வழக்கம். 

 அவர் அடிக்கடி வெளியூருக்குச் சென்று விடும் நிலையில் ராஜ்குமாரின் மனைவிக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.   இந்த பழக்கம்  கள்ள உறவாக மாறி இருக்கிறது.   வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள் .

aa

வீட்டின் உரிமையாளர் என்பதால் ராஜ்குமார் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தாமல் இருந்திருக்கிறது.  இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வீட்டின் உரிமையாளர் அடிக்கடி வந்து ராஜ்குமாரின் மனைவியுடன்  உல்லாசம் அனுபவித்து விட்டு சென்றிருக்கிறார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராஜ்குமார் வேலைக்கு சென்று இருக்கிறார்.

 வழக்கம்போல வெளியூர் சென்று விட்டுத் தான் வருவார் என்று நினைத்த காதலனை வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருந்திருக்கிறார்.  ஆனால் உள்ளூரில் வேலை முடிந்து விட்டதால் அன்று மாலையே வீடு திரும்பியிருக்கிறார் ராஜ்குமார்.   அப்போது வீட்டின் அறையில் மனைவி வீட்டின் உரிமையாளருடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். 

 உடனே சத்தம் போட்டு இருவரையும் கண்டித்திருக்கிறார்.  இதில் ஆத்திரம் அடைந்த மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை  கணவரை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.   வீட்டில் இருந்த கத்தியை,  இரும்புக் கம்பிகளைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.   படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

  சம்பவம் குறித்து கேள்விப்பட்ட நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகாரில் தலைமறைவாக உள்ள கள்ள உறவு ஜோடியை தேடி வருகின்றார்கள் போலீசார்.