கொடூர தாய்-தந்தை: 16 மாத குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை

 
ச்

பெற்ற தந்தையே இப்படி ஒரு செயலை செய்வாரா?  அதற்கு பெற்ற தாயே உடந்தையாக இருந்திருக்கிறாரே என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது அந்த தம்பதிகளின் செயலை பார்க்கும்போது.

 தெலுங்கானாவின் செகந்திராபாத்திலிருந்து குஜராத்தின் ராஜ் கோட்டுக்கு சென்ற ரயிலில்  கணவன் மனைவி இருவரும் 16 மாத பெண் குழந்தையுடன் பயணித்திருக்கிறார்கள் அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் சத்தமும் இல்லாமல் இருந்ததால் சந்தேகமடைந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

ச்ச்

 வேறு யாரேனும் குழந்தையை மயக்க மருந்து கொடுத்து கடத்தி செல்கிறார்கள் என்ற கோணத்தில் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார் டிக்கெட் பரிசோதகர்.   இதையடுத்து ரயில் மகாராஷ்டிராவின் சோலாப்பூர் வந்ததும் அந்த தம்பதிகள் இருவரையும் போலீசார் அங்கிருந்து கீழே இறக்கி இருக்கிறார்கள்.  கீழே இறங்கிய அவர்களிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த குழந்தை அவர்களுக்கு பிறந்த பெண்குழந்தை தான் என்பது தெரியவந்திருக்கிறது.

குழந்தைக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் அக்குழந்தை உயிரிழந்துவிட்டதும்,  பாலியல் துன்புறுத்தலால் உயிரிழந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.  அந்த 16 மாத பச்சிளம் குழந்தையை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாலும் ,  அதற்கு உடந்தையாக இருந்த தாயே  குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறார்  என்பதை கேட்டு போலீசார் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

 இறந்த குழந்தையை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்காக ரயிலில் கொண்டு சென்ற போதுதான் போலீசில் அவர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்பது தெரியவந்து இருக்கிறது.  இதை அடுத்து கணவன் மனைவி இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளார்கள் போலீசார்