சினிமா எடுக்க பணம் கொடுக்காததால் சித்ரவதை - இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

 
sh

 சினிமா எடுக்க பணம் கொடுக்காத மனைவியை தொடர்ந்து  சித்ரவதை செய்து வந்ததால் அந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை கொண்டிருக்கிறார்.

 சினிமா எடுக்க பணம் தராத மனைவியை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அந்த இளம்பெண். கேரளாவில் அரங்கேறியிருக்கிறது இந்த கொடுமை.   

வரதட்சனை கொடுமையால் கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் விஸ்மயா மர்ம மரணம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வரதட்சணைக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.  ஆனாலும் வரதட்சணை கொடுமைகள் குறைந்தபாடில்லை.   தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.  

us

 கேரள மாநிலத்தில் ஆலுவா பகுதியை  சேர்ந்த மோபியா என்கிற இருபத்தி ஒரு வயது பெண்  சட்டம் பயின்றிருக்கிறார்.   வீட்டினர் திருமண புரோக்கர் மூலமாக இவருக்கு வரன் பார்த்து வந்த நிலையில்,   சுஹைல் என்பவரின் வரம் குறித்து புரோக்கர் தெரிவித்திருக்கிறார்.   ஆனாலும் வீட்டினர் அந்த வரன் வேண்டாமென்று தவிர்த்து இருக்கிறார்கள்.

 இந்த நிலையில் மோபியாவை முகநூலில் எப்படியோ தேடிப் பிடித்து கண்டுபிடித்து விட்டார் சுஹைல்.   புரோக்கர் மூலமாக நழுவிய மோபியாவை முகநூல் மூலமாக பிடித்துவிட  முடிவெடுத்திருக்கிறார்.   அவரிடம் தொடர்ந்து நட்பாக பேச்சுக் கொடுத்து அவரிடம் நல்ல அபிப்பிராயம் வாங்கிய பின்னர் தன் காதலை சொல்லியிருக்கிறார்.  அதன் பின்னர் திருமணத்தையும் சொல்லியிருக்கிறார்.  கடந்த  ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடந்திருக்கிறது.

 திருமணத்திற்கு முன்னர் பெண் வீட்டாரிடம் தான் துபாயில் வேலையில் இருப்பதாக சொல்லியிருக்கிறார் யூடியூப் வேலையில் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். ஆனால் திருமணத்திற்குப் பின்னர், தான்  திரைப்படம் இயக்கம் இருப்பதாகவும் அதற்காக 40 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்றும் மோபியாவிடம் கேட்டிருக்கிறார் திரைப்படம் இயக்கவேண்டும் என்கிற சாக்கில் வரதட்சனை கேட்கிறார் என்பதை உணர்ந்து அதற்கு மறுத்துள்ளார்.   இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை இருந்திருக்கிறது.

 வேலைக்கும் செல்லாமல் இருந்திருக்கிறார் சுஹைல்.  இதனால் வேலைக்கு சென்ற மோபியாவின்  வருமானத்தில்தான் குடும்பத்தை ஓட்டி வந்திருக்கிறார்கள். தொடர்ந்து பணம் கேட்டு சித்திரவதை செய்து வந்ததால் கடந்த நவம்பர் 22ஆம் தேதியன்று ஆலுவா போலீசில் புகார் அளித்திருக்கிறார்  மோபியா.  போலீசார் குடும்பத்தினர் அனைவரையும்  அழைத்து விசாரித்தபோது,   அங்கேயே விட கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார் சுஹைல்.

 இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மோபியா வீட்டிற்கு வந்ததும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  அவர் இறப்பதற்கு முன்பாக ஒரு தற்கொலை கடிதம் எழுதியிருக்கிறார்.  அதில், என் வரதட்சணை புகாரை கண்டுகொள்ளாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.  இந்த தற்கொலை கடிதத்தின்படி போலீசார் குடும்பத்தினரை விசாரணை நடத்தி வருகிறார்கள் .  

வரதட்சணை புகாரை விசாரிக்காத அந்த காவல் அதிகாரி மீதும் துறை ரீதியான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என்பதால் அது குறித்து  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலிறுத்தி வருகின்றனர் மோபியா குடும்பத்தினர்.