கருவை கலைக்கச்சொன்ன கணவரை சரமாரியாக குத்திக்கொன்ற மனைவி

 
m

கருவை கலைக்கச் சொன்ன கணவரை கழுத்து , மார்பு, வயிறு   என்று சரமாரியாக குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்திருக்கிறார் மனைவி.  துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார் கணவர்.   விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 விளந்தை கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கட்டிட தொழிலாளி.  இவருக்கும் சுரேகா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.  இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.   இந்த தம்பதிக்கு அபிநயா என்கிற பெண் குழந்தையும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர்.

bb

 சமீப காலமாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் சுரேகா,  கணவனிடம் கோபப்பட்டுக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.  இந்த நிலையில் சுரேகா 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்திருக்கிறது.   இதனால் மனைவி மீது சந்தேகம் கொண்ட சந்தோஷ்,  கருவை கலைத்து விடு என்று சொல்லி கட்டாயப் படுத்தி இருக்கிறார்.   இதில் சந்தோஷ் - சுரேகா இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

 இந்த வாக்குவாதம் முற்றி இருவரும் கடுமையாக சத்தம் போட்டு பேசி இருக்கிறார்கள்.   அப்போது மனைவி சுரேகாவை கத்தியால் குத்த முயன்றிருக்கிறார் சந்தோஷ். ஆவேசத்தில் கணவரின் கையில் இருந்த கத்தியை பறித்து அவன் கணவரின் கழுத்து ,மார்பு ,வயிறு என்று பல இடங்களில் சரமாரியாக ஆவேசமாக குத்தியிருக்கிறார் சுரேகா.

இதில் சந்தோஷ் துடி துடித்து இரத்த வெள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து இருக்கிறார்.    சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சந்தோஷ் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுரேகாவிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.