இரவில் பெண் போலீஸ் வீட்டிற்குள் நுழைந்து ஏட்டு செய்த காரியம்

 
po

 ஈரோடு பழைய ரயில் நிலையம் பகுதியில் வசித்து வருபவர் செல்வன்.  போலீஸ் ஏட்டு இவர் சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டிடம்  டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி ஈரோடு ரயில்வே  போலீசாக இருந்து வருகிறார்.

 இதனால் செல்வன் ஈரோட்டுக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். அப்போது ஈரோட்டில் வசிக்கும் 29 வயதான பெண் போலீசுடன் செல்வனுக்கு நட்பு ஏற்பட்டு இருக்கிறது.  அந்த பெண் போலீஸ் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.

arr

 இந்த நிலையில் அந்தப் பெண் போலீஸ் வீட்டுக்கு இரவில் திடீரென்று சென்றிருக்கிறார் செல்வன்.  அங்கு தனியாக இருந்த அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார்.  இதில் செல்வனின் பிடியில் இருந்து தப்பித்து வெளியே ஓடிவந்தவர்,  அக்கம்பக்கத்தினரின் உதவி கேட்டு  சத்தம் போட்டிருக்கிறார் .

 அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விசாரித்தபோது விவரத்தைச் சொல்ல அவர்கள் ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்கள் .  சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் சம்பவம் உண்மை என்று தெரிய வந்ததால் அத்துமீறி நுழைதல்,  கொலை மிரட்டல் விடுத்தல்,  பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.