குளியல் படத்தை தோழிக்கு அனுப்பிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

 
ப

இளம் பெண்ணின் குளியல் படத்தை ஆண் நண்பருக்கு அனுப்பிய தோழி கூட்டாளிகளுடன் சிக்கினார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் அந்த இளம்பெண் தான் குளித்துக் கொண்டிருக்கும்போது ஆர்வமிகுதியில் அதை செல்போனில் படம் பிடித்து இருக்கிறார்.    பின்னர் தனது தோழி சுவீட்டியின் செல்போனுக்கு அந்த குளியல் புகைப்படத்தை அனுப்பி இருக்கிறார்.

பட்

 தோழி என்பதால் நம்பிக்கையுடன் அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.  ஆனால் அந்த தோழி நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார்.   தனது ஆண் நண்பர்  ஜாக்சனுக்கு அந்த குளியல் படத்தை அனுப்பி வைத்திருக்கிறார் அவர்.  அவருடைய நண்பர்கள் பலருக்கும் அந்த குளியல் படத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்திருக்கிறார் ஜாக்சன்.

 அந்த குளியல் படத்தை வைத்துக்கொண்டு அந்த இளம்பெண்ணுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்திருக்கிறார் ஜாக்சன்.  நாளுக்கு நாள் ஜாக்சனின் மிரட்டல் அதிகமாகிக்கொண்டே இருக்க அதை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த இளம்பெண் கருங்கல் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.  இளம்பெண் கொடுத்த புகாரின்படி  சுவீட்டி மற்றும் ஜாக்சன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.