தாயை திட்டிய தந்தையை கழுத்தை அறுத்து கொன்ற மகன்

 
k

தாயை திட்டியதால் ஆத்திரமடைந்த மகன் கத்தியால் கழுத்தை அறுத்து தந்தையை கொலை செய்த சம்பவம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 ஆண்டிபட்டி அடுத்த சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் தர்மராஜ் .  இவரது மனைவி மீனா.   இந்த தம்பதி சங்கிலி முருகன் என்ற மகன் இருக்கிறார். கொத்தனார் வேலை செய்து வந்த தர்மராஜ் தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் பணம் கேட்டு சண்டை போட்டு வந்திருக்கிறார்.   எப்போதும் போல் சம்பவத்தன்று மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.

aa

 அப்போது மனைவியை  கண்டபடி திட்டி இருக்கிறார்.  இதைக்க் கேட்டு ஆத்திரமடைந்த மகன் சங்கிலி முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தையின் கழுத்தை அறுத்து முதுகில் ஆவேசமாக குத்தி இருக்கிறார்.   இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த தர்மராஜ் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்திருக்கிறார் மீனா.   அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

சம்பவம் அறிந்து வழக்குபதிவு செய்த ஆண்டிபட்டி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.