மாணவியை கோவிலில் அடைத்து வைத்திருந்த பூசாரி போக்சோவில் கைது

 
po

சாமி கும்பிடுவதற்காக கோயிலுக்குச் சென்ற சிறுமியை கோவிலுக்கு உள்ளேயே அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த பூசாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  சிறுமியும் மீட்கப்பட்டிருக்கிறார்.  திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

 கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதியில் உள்ளது அம்மன் கோயில்.   இக்கோவிலில் சின்ன பள்ளம் பகுதியைச் சேர்ந்த ராமசுந்தரம் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.   

ra

 நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்றிருக்கிறார் .  பள்ளியில் படித்து வரும் அந்த சிறுமியை கோவில் பூசாரி பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு கோவிலுக்குள் அடைத்து வைத்திருந்திருக்கிறார்.

 மகளை காணவில்லை என்று பெற்றோர் ஊர் முழுவதும் தேடிய பின்னர் போலீசிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.   போலீஸாரின் தீவிர தேடலில் கோயிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமி மீட்கப்பட்டிருக்கிறார்.   இதையடுத்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த கோயில் பூசாரி ராமசுந்தரம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.