பொங்கல் தொகுப்பு வாங்க சென்ற மூதாட்டி படுகொலை

 
mm

பொங்கல் தொகுப்பு வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 செங்கோட்டை தாலுகாவில் கேசவபுரம் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர்  பாப்பம்மாள்.  மூதாட்டியான இவருக்கும் இவரது உறவினரான முருகன் என்பவருக்கும் இடையே நீண்டநாள் இடப்பிரச்சனை இருந்து வந்திருக்கிறது.

pl

 இந்தநிலையில் நேற்றைக்கும் இவர்களுக்கு இடையே பிரச்சினை தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.   வாக்குவாதம் வழக்கத்தை விட சற்று அதிகமாக முற்றிப்போய் இருக்கிறது.   அதன் பின்னர் பாப்பம்மாள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு சென்று இருக்கிறார் .

அப்போது அவரை பின்தொடர்ந்து சென்று இருக்கிறார் முருகன் .   வழியில் சென்று கொண்டிருந்த பாப்பம்மாளை கோடரியால் வெட்டி படுகொலை செய்திருக்கிறார்.    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாப்பம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .  அதன்பின்னர் பாப்பம்மாளை கொலை செய்த முருகனை கைது செய்து அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.