அழகாக இருக்கிறாய்; அதனால் சந்தேகமாக இருக்கிறது- மனைவியை கொன்று சிறைக்கு சென்ற கணவன்

 
k

விருதுநகர் மாவட்டத்தில் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வரும் கண்ணன்,  வங்கி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இவர் கற்பகம் என்பவரை திருமணம் செய்துகொண்டு பதினோரு ஆண்டுகள் ஆகின்றன.    இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள்  உள்ளனர்.  

கற்பகம் அழகாக இருந்ததால் ஆரம்பத்தில் இருந்தே சந்தேகப்பட்டு வந்திருக்கிறார் கண்ணன்.   கற்பகம் யாரிடம் பேசினாலும் சந்தேக கண்கொண்டு பார்த்து அவரை சந்தேக கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறார்.   இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. 

 தனக்கு பிறந்த மகன் தன்னை போல் இல்லை என்று சொல்லியும் கற்பகத்திடம் தகராறு செய்து வந்திருக்கிறார்.    மனைவி  அழகாக இருப்பதால் அவர் மீது சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது.

poll

 இந்த நிலையில் இன்றைக்கும் கண்ணன் - கற்பதற்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது.  இதில் ஆத்திரமடைந்த கண்ணன்,  கத்தியை எடுத்து கற்பகத்தை சரமாரியாக கத்தியால் குத்தி இருக்கிறார்.  இதில்  சம்பவ இடத்திலேயே கற்பகம் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.   அதன்பின்னர் விருதுநகர் ஊரக காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்திருக்கிறார்.

 இதன் பின்னர் போலீசார் கற்பகம் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.   வங்கி ஊழியர் கண்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலிசாரின் விசாரணையின் போதுதான் மனைவி மீது உள்ள சந்தேகத்தால்  கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார்.  பால்காரர், காய்கறிகாரர் என்று தன் மனைவி யாரிடம் பேசினாலும் சந்தேகப்பட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.   கண்ணனின் சந்தேகத்தால் சித்திரவதை அனுபவத்து வந்த கற்பகம் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

 தாய் கொலை செய்யப்பட,  தந்தை சிறைக்குச் செல்ல இரண்டு குழந்தைகளும்  தவியாய் தவித்து நிற்கிறார்கள்