ஜாதகம் பார்க்க கோயிலுக்கு போன சிறுமி -சாதகமாக்கிக்கொண்ட பூசாரி கைது

 
ko

 ஜாதகம் பார்ப்பதற்காக கோயில் பூசாரியை பார்க்கச் சென்ற சிறுமியை வன்கொடுமை செய்திருக்கிறார் அந்த பூசாரி.  அவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.

 ஜாதகம் பார்க்கும் வழக்கம் இல்லாதவர்கள்தான் இன்று குறைவு . அந்தளவுக்கு தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஜாதகம் பார்ப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.   கேரளாவில் இன்னும் அதிகமாகவே இதற்கு ஆர்வம் இருக்கிறது.

 அம்மாநிலத்தில் கோட்டயத்தில் பரீத் ஸ்ரீபுரம் கோயில் உள்ளது.   இந்தக் கோயிலில் ஷிரிஸ் என்ற 33 வயது நபர் பூசாரியாக உள்ளார்.   இவரிடம் ஜாதகம் பார்ப்பதற்காக தனது மகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் சென்றிருக்கிறார்கள்.

si

 அப்போது பூசாரி ஷிரிஸ், பெற்றோருக்குத் தெரியாமல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.   வீட்டிற்கு வந்த சிறுமி பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தைகள் நலக்குழு மற்றும் குமரகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க,  புகாரின்பேரில் போலீசார் பூசாரியை கைது செய்திருக்கிறார்கள்.

 ஜாதகம் பார்க்க வந்த சிறுமியை பாலியல் பூசாரி வன்கொடுமை செய்த விவகாரம் கோட்டயத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.