வேறு சாதி பையனை மணந்ததால் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தந்தை

 
ஹ்

 தங்கள் சாதியை விட்டு வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் ஆணவ கொலை செய்வது காலங்காலமாக இருந்து வருகிறது.  தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவெங்கிலும் இந்த ஆணவக் கொலைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.  

 விஷம் கொடுத்து, தூக்கில் தொங்கவிட்டு,  கொன்ற பின்னர் தூக்கில் தொங்கவிட்டு, அடித்துக் கொன்று, சரமாரியாக வெட்டிக் கொன்று, கழுத்தை நெரித்து கொன்று இப்படித்தான் ஆணவ கொலைகள் நடந்து வந்திருக்கின்றன.   ஆனால் ஒரு தந்தை தன் மகள் வேறு சாதியைச் சேர்ந்த பையனை திருமணம் செய்து கொண்டதற்காக தன் மகளையே பாலியல் வன்கொடுமை செய்து அதன்பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கிறார்.   இந்த அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.

 அம்மாநிலத்தில் சாஜபூர் மாவட்டத்தில் கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வந்திருக்கிறார் அந்த இளம்பெண்.   வேலை நிமித்தம் காரணமாக அப்பெண்ணின் கணவர் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார்.  இந்த நிலையில் தீபாவளி பண்டிகை  வந்ததால் தீபாவளி பண்டிகையை கொண்டாட தனது மூத்த சகோதரி வீட்டிற்கு சென்றிருக்கிறார்.   அங்கு சென்ற பின்னர் குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் வந்திருக்கிறது . அதில் சிகிச்சை பலனளிக்காமல் அக்குழந்தை உயிரிழந்து இருக்கிறது.

ஹ்1

 குழந்தை உயிரிழந்தது செய்வதறியாது தவித்த அந்த இளம்பெண் தன் தந்தைக்கு போன் செய்திருக்கிறார்.   எவ்வளவோ சொல்லியும் வேறு சாதிப் பையனை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் இருந்த,   மகள் எங்கே இருக்கிறார் என்று தேடிக் கொண்டிருந்த சாதிவெறியில் அலைந்து கொண்டிருந்த தந்தைக்கு இப்படி ஒரு தகவல் வந்ததும் உடனே புறப்பட்டு வந்திருக்கிறார்.

 மகளைப் பார்த்ததும் உயிரிழந்த கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு மகளையும் அழைத்துக்கொண்டு புதைப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றிருக்கிறார்.  அங்கு சென்றதும் வேறு ஜாதிப் பையனுடன் ஏன் ஓடிப் போன..? என்று பேச்சைத் ஆரம்பித்திருக்கிறார்.   அதற்கு மகள் பதில் சொல்ல பதிலுக்கு இவரும் ஒன்று பேச கடும் வாக்குவாதம் ஆகியிருக்கிறது.   இதில் ஆத்திரமடைந்த தந்தை பெற்ற மகள் என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.

 பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தினால் தான் உனக்கு சரியான பாடம் என்று சொல்லி இருக்கிறார்.  பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துதிருக்கிறார்.  அதன்பின்னர் குறிவைத்து கைக்குழந்தை மற்றும் மகள் இருவரையும் புதைத்துவிட்டு போலீசில் வந்து மகளை காணவில்லை என்று புகார் அளித்திருக்கிறார் 10 நாட்களுக்கு பின்னர் வனத்துறை அதிகாரிகள் புதைக்கப்பட்ட சடலங்களை எடுத்துள்ளனர்.   அதையடுத்து நடந்த விசாரணையில் சாதிவெறியால் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

 இந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.  அடப்பாவி நீ எல்லாம் ஒரு மனிதனா என்று பலரும் அந்த தந்தையை தூற்றி  வருகின்றனர்.