மனைவியை பழிவாங்க மகனை கழுத்தறுத்து கொன்ற தந்தை

 
de

 விவாகரத்து கேட்ட மனைவியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது மகனை கொன்ற தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  

இத்தாலியில் வரீஸ் மாகாணம் மொராசோனின் கம்யூன் பகுதி.   இப்பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் பைடோனி.   40 வயதாகும் இவருக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் இருந்தார்.  

டேவிட் பைடோனிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்திருக்கிறது.   ஒரு கட்டத்திற்கு மேல் இதை பொறுத்துக்கொள்ள முடியாத டேவிட்  மனைவி போலீசில் புகார் அளித்திருக்கிறார்.   அத்தோடு நிற்காமல் டேவிட்டிடமிருந்து விவாகரத்து பெறுவதற்காக குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.   இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.   7 வயது மகன் தாயுடன் வசித்து வந்திருக்கிறார்.

 மனைவியை பிரிந்த மன உளைச்சலில் இருந்த டேவிட் ,   அலுவலகத்தில் சக ஊழியரை  கத்தியால் குத்த முயற்சித்திருக்கிறார்.   இந்த வழக்கில் டேவிட் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். 

c

தனிமையில் வீட்டுச்சிறையில் இருப்பதால் மகனை  தன் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். கடந்த புத்தாண்டு தினத்தன்று தன்னுடைய ஏழு வயது மகனுடன் ஒன்றாக சேர்ந்து செலவிட வேண்டும் என்றும்,  மகனை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் டேவிட் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க அதை ஏற்று அவருடன் சிறுவனை அனுப்பி வைக்க உத்தரவிட்டு இருக்கிறது நீதிமன்றம்.

இந்த நிலையில்,  தன்னிடம் விவாகரத்து கேட்கும் மனைவியை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவும் மனைவி மீது பழிபோடுவதற்காகவும் சைக்கோத்தனமாக திட்டமிட்டு தனது மகனை கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்து இருக்கிறார். பின்னர் மகனின் உடலில் மறைத்து வைத்துவிட்டு மனைவியின் வீட்டிற்குச் சென்று உனது மகனை  திரும்ப அழைத்து வந்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

arr

இதைகேட்டு உண்மை என்று நம்பி,  வெளியே வந்து குழந்தையை பார்க்க வந்தபோது அவரையும் கத்தியால் குத்தி இருக்கிறார்.   சரமாரியாக கத்தியால் குத்தியதில் அலறியடித்து கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தூக்கி  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இதை பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார் டேவிட்.  ஆனாலும்  இத்தாலி போலீசார் விரட்டி பிடித்து சிறையில் அடைத்து விட்டார்கள்.

அதன்பின்னர்தான் மகனையும் கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.  

 தந்தையிடம் செல்வதில் துளிகூட விருப்பம் இல்லாமல் இருந்தான் என் பேரன்.  நான்தான் சமாதானம் செய்து தந்தையிடம் கொஞ்சநாள் இரு என்று அனுப்பி வைத்தேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறேன் என கண்ணீர் வடிக்கிறார் டேவிட்டின் தந்தை.