படிக்காமல் செல்போனில் கவனம் - 5வயது மகனை அடித்துக்கொன்ற தந்தை

 
க

எந்நேரமும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததால் 5 வயது மகனை கடுமையாக தந்தை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான் சிறுவன்.  இதையடுத்து தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

 டெல்லியில் கான்பூர் பகுதியைச் சேர்ந்த ஆதித்யா பாண்டே பால் வியாபாரம் செய்து வந்திருக்கிறார்.   இவருக்கு கியான் பாண்டே என்கிற ஐந்து வயது மகன் இருந்துள்ளார்.    படிப்பில் கவனம் செலுத்தாமல் எந்நேரமும் செல்போனில் விளையாடிக் கொண்டே இருந்திருக்கிறான் கியான்.

க்

 இதனால் ஆதித்யா மகனை தினமும் கண்டித்து வந்திருக்கிறார்.  செல்போனில் அதிகநேரம் விளையாடக்கூடாது என்று தொடர்ந்து கண்டித்துக் கொண்டே வந்திருக்கிறார்.    ஆனால் அதை காதில் வாங்காமல் செல்போனில் விளையாடுவதையே  தொடர்ந்து வந்திருக்கிறார்.  ,  இதனால் ஆத்திரமடைந்த தந்தை கியான் பாண்டேவை கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இதில் சிறுவன் மயக்கமடைந்து கீழே விழுந்து இருக்கிறான்.

 இதில் பதறிப்போன ஆதித்யாவும் அவரது மனைவியும்  மகனை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.   சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள்  ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் . 

இதைக் கேட்டு அதிர்ச்சியில் நின்றிருந்த பெற்றோரிடம் போலீசார் நடந்தது என்ன என்பது குறித்து விசாரித்தபோது முதலில் அவர்கள் உண்மையை சொல்லவில்லை. இதன் பின்னர் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது   சிறுவனின் கை, கால் ,கழுத்து பகுதியில் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தெரிந்ததால் துருவித் துருவி விசாரணை நடத்தியதில் ஆதித்யா பாண்டே உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.   இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.