இரட்டைக்கொலைகளால் அதிர்ந்துபோயிருக்கும் செங்கல்பட்டு

 
ப்ப்

வெடிகுண்டு வீசியும் அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை நடந்திருக்கின்றது. அடுத்தடுத்து நடந்த இரட்டை கொலை அதிர்ந்துபோயிருக்கிறது செங்கல்பட்டு.  

செங்கல்பட்டு மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்.  20 வயதான இந்த இளைஞருக்கு திருமணமாகி மனைவி மகன் உள்ளனர்.  காய்கறி வியாபாரியான இவர் ரவுடி அப்பு கார்த்திக் உறவினர். நேற்று வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார் மகேஷ் .   அப்போது 3 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றிருக்கிறது.

ப்ப்

செங்கல்பட்டு சின்ன நத்தம் கே.கே. தெருவைச் சேர்ந்தவர் அப்பு கார்த்திக் . 38 வயதான இவர் மீது இரண்டு கொலை வழக்கு உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட்டு வருகிறார்.  அப்பு கார்த்திக் நேற்றும் வழக்கம் போல் காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டுவிட்டு அருகில் உள்ள டீக்கடையில் மாலை ஆறு முப்பது மணி அளவில் நின்று கொண்டிருந்திருக்கிறார்.

 அப்போது பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவர் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசி இருக்கிறார்கள்.   குண்டு வெடித்ததில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

 தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 அப்போது ஒரு பையில் வெடிக்காத நிலையில் ஐந்து நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன.   அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை கொலைகளால் அதிர்ந்து போயிருக்கிறது செங்கல்பட்டு மாவட்டம்.