பொள்ளாச்சியில் பயங்கரம் - சிறுமி வாயில் துணியை அடைத்து, கைகளை கட்டி.. பின்னர் வீசிச்சென்ற கொடூரம்

 
b

 11 வயது சிறுமியை சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் வாயில் துணியை வைத்து அடைத்து, கண்களை கட்டி, க் கொண்டு வந்து வீட்டறுகே வீசி விட்டு சென்ற மர்ம நபர்களை பிடிக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

 பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.  புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட வால்பாறை, பொள்ளாச்சி, மானாம்பள்ளி, உடுமலை, அமராவதி 6ஆகிய இடங்களிலும் 15  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள்  வசித்து வருகின்றார்கள்.

n

புத்தாண்டு  முதல் தேதியன்று வால்பாறை பகுதியில் மானாம்பள்ளி வனச்சரகத்தில் பிற்பட்ட கூடமாட்டி  மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்தில் நண்பகல் 2 மணிக்கு சில நபர்கள் புகுந்து அங்கு வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று இருக்கிறார்கள்.   அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அச்சிறுமியை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள் .  அதன் பின்னர் பகல் 12 மணிக்கு கடத்திச் சென்ற அந்த சிறுமியை இரவு 7 மணியளவில் வாயில் துணியை வைத்து அடைத்து கண்களை கட்டி வீட்டின் அருகில் கொண்டு வந்து விட்டு விட்டு சென்றிருக்கிறார்கள்.

 இதை பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.  குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.   பாலியல் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.  

பெற்றோரும், கிராம மக்களும்  இணைந்து பொள்ளாச்சி சார் ஆட்சியரை சந்தித்து இந்த கொடூரத்திற்கு நீதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.