சிக்கும் தமிழக சினிமா நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள் - மனைவியை மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவித்தது அம்பலம்

 
ச்ந்

 மனைவிகளை மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிக்கும் கேரளாவின் குழுவில் தமிழகம் மற்றும் கோவாவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், திரையுலக பிரமுகர்களும் அங்கம் வகிப்பது அம்பலமாகி இருக்கிறது.

கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் தனது சகோதரருடன் சென்று கறுகச்சால் காவல்நிலையத்தில் கணவர் மீது அதிர்ச்சியளிக்கும் அந்த புகார் அளித்திருந்தார்.

அப்ப்

தன் கணவர் வேறு நபர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுடன் உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிறார் என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

கணவர் சொல்லும் நபர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்றால் குழந்தைகளை கொன்று விடுவதாக சொல்லி மிரட்டினார்.  இதனால் நானும் பயந்துகொண்டு கணவர் சொன்ன நபர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டேன்.    இப்படி கணவர் என்னை மிரட்டி மிரட்டி 8 பேருடன் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள வைத்திருக்கிறார்.   இது எல்லை மீறிப் போய்க் கொண்டே இருந்ததால் தான் இப்போது வேறு வழியின்றி புகார் அளித்து இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

 அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் அவரின் கணவரை அழைத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் மிகப்பெரிய கும்பல் பற்றிய அதிர்ச்சித் தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அந்த இளம் பெண்ணின் கணவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.  அப்போது,  ‘ ஒய்ப் ஸ்வாப்பிங்’ என்கிற பெயரில் பல கும்பல்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளன என்றும்,   ’கப்பில் ஷேரிங் ’என்கிற பெயரில் இந்த கும்பல் சமூக வலைத்தளங்களில் இயங்கி வந்ததும் தெரியவந்தது.

எர்

 சமூக வலைத்தளங்களில் ‘சீக்ரெட் சாட் ’மூலம் தொடர்பு கொண்டு மனைவியரை மாற்றிக் கொண்டு உல்லாசம் அனுபவித்து வந்தது தெரியவந்தது.  டெலிகிராம் மற்றும் மெசேஞ்சர் செயலிகளில் ரகசிய குழுக்களை ஏற்படுத்தி இந்த கும்பல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.   கைது செய்யப்பட்ட 6 பேரின் செல்போன் மற்றும் சமூக வலைத்தள கணக்குகளில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர் என்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   இதன் பின்னர் மேலும் பல்வேறு குழுக்களை  போலீசார் தீவிரமாக கண்காணித்து  கண்காணித்து வந்தது.

அப்போது  ஸ்டட்ஸ்   என்ற ரகசிய சொல்லால் அழைக்கப்படும் குழுவில் சேர 14,000 ரூபாய் கட்டணம் என்று தெரியவந்தது.  இந்த குழுவில் போலியான பெயர்களை வைத்துக்கொண்டு இவர்கள் தொடர்புகொண்டு   வீடுகள் மற்றும் ஓய்வு விடுதிகளில் இந்த உல்லாச சந்திப்புகள் நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் குழுவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மட்டுமல்லாது பிற மாநிலங்களின் தம்பதிகளும் பங்கேற்றுள்ளனர் என்பது தெரியவந்திருக்கிறது .  

இந்தக் குழுக்களில் சமூகத்தில் மிக உயரிய அந்தஸ்தில் இருக்கும் விஐபிகள் பலரும் போலியான பெயர்களில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது தெரிய வந்திருக்கிறது.  ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் இயங்கி வந்த  இந்தக் குழுக்களில் தமிழகம் மற்றும் கோவா மாநிலங்களைச் சேர்ந்த பிரபலங்களும் இருப்பது அம்பலமாகியிருக்கிறது .  தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்,  திரை உலக பிரமுகர்கள் இந்தக் குழுக்களில் உள்ளனர் என்பது போலீசார் கண்டறிந்துள்ளனர் .   இந்த குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக பிரபலங்களிடம் எப்படி இவர்கள் அந்த குழுவில் இணைந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.