கணவனுக்கு வந்த சந்தேகம் - கரும்புகாட்டில் மனைவிக்கு நடந்த கொடுமை

 
go

மனைவியின் மீதுள்ள சந்தேகத்தால் அவரைக் கொன்று கரும்பு தோட்டத்தில் எரித்துள்ளார் கணவன்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலஸ்தாம்பாடி கிராமத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 கலஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.   இவருக்கு திருமணமாகி கௌதமி என்கிற மனைவியும் 9 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 

 ராஜா கடந்த சில மாதங்களாக மதுவிற்கு ரொம்பவே அடிமையாகிப் போகி ஆட்டோ ஓட்டுவதற்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து ரகளை செய்து வந்திருக்கிறார் . மதுபோதையில் அடிக்கடி மனைவியை அடித்ததோடு எல்லாம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்திருக்கிறார் . மேலும் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் வந்திருக்கிறது.   இதை சொல்லிச் சொல்லியே தினமும் கவுதமியை அடித்து இருக்கிறார்.

gow

 இந்தநிலையில் நேற்று மாலையில் கௌதமி வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார்.   பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.  இதனால் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்திருக்கிறார்கள்.  எங்கேயும் காணவில்லை என்பதால் காலையில் ராஜாவின் தாயார் பச்சையம்மாள் தங்களுக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றுள்ளார்.  அப்போது கரும்பு தோட்டத்தில் எரிந்த நிலையில் கவுதமி  கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பச்சையம்மாள் அங்கு இருந்தவர்களிடம் சொல்லிக்  கதறியிருக்கிறார்.

அங்கு வந்த கிராமத்தினர் மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவும் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்திருக்கிறார். 

 இதனால் போலீசாருக்கு சந்தேகம் வந்ததால் அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியதில்,  எங்கள் கிராமத்தில் உள்ள ஒரு நபருக்கு,  மனைவிக்கும் கள்ள தொடர்பு உள்ளதாக சந்தேகம் இருந்தது.   இந்த சந்தேகம் அதிகமானதால் நாளுக்கு நாள் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.  இதனால் கௌதமியை கொலை செய்த முடிவு செய்து நேற்று மாலை கவுதமியின் கழுத்தை  நெரித்திக்கொன்றேன்.  அதன்பின் கொலையை மறைப்பதற்காக அருகில் இருந்த கரும்பு தோட்டத்தில் சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டேன் என்று வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார்.

 இதையடுத்து கொலை வழக்கு பதிவு  செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.