சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு - சிறுவன் போக்சோவில் சிறையிலடைப்பு

 
ச்

பதினாலு வயது சிறுமிக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்படைந்ததை  அடுத்து  ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்த போது சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார் என்று தெரியவந்திருக்கிறது.    இதனால் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த ஜூன் மாதத்தில் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.    இருவரும் ஒன்றாக பழகி வந்த நிலையில் திடீர் என சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ததால் அதிர்ச்சிக்குள்ளாகி அதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்திருக்கிறார்.

த்

 இந்தநிலையில் சிறுமிக்கு திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போய் இருக்கிறது.    இதனால் அச்சிறுமியை கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.   அங்கு சிறுமிக்கு நடந்த சிகிச்சையில் அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.

 இதையடுத்து அங்கிருந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க,  தேனிகனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் போலீசார் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிறுமியிடம் விசாரிக்க,   அச்சிறுவனை அடையாளம் காட்டியிருக்கிறார்.    இதையடுத்து  இருளப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார்.