உறவினர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவன்

 
huu

மாமியாரும் கணவரும் சேர்ந்து அடித்து உதைத்ததோடு மட்டுமல்லாமல், உறவினர்களுடன்  சேர்ந்து  மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் கணவர். இந்த வரதட்சணை கொடுமையினால் கணவரும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்ப இருக்கிறார்கள்.

 உயர் ரக சொகுசு கார் வாங்கிக் கொடுக்காததால் மருமகளை சித்திரவதை செய்து வந்திருக்கிறார் மாமியார்.  கணவரே அவரது உறவினர்களை அழைத்து தன் மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். மேலும் மனைவியையும் மகன்களையும் வீட்டை விட்டு அடித்து துரத்தி உள்ளனர்.  இந்த  கொடுமை பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அரங்கேறியிருக்கிறது.

kuu

 கடந்த 2003 ஆம் ஆண்டு மேட்ரிமோனி மூலம் அந்தப் பெண் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.   திருமணத்தின் போது விலை உயர்ந்த தங்கம் வெள்ளி நகைகளை வரதட்சணையாக வழங்கி இருக்கிறார்கள்.   ஆனால் திருமணத்திற்குப் பின்னர் வரதட்சணை போதவில்லை என்று அப்பெண்ணை துன்புறுத்தி வந்திருக்கிறார்கள். அந்த இளம்பெண்ணிடம் பென்ஸ் கார் மற்றும் நகைகள் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர் மாமியாரும் கணவரும்.  அதை இரண்டையும் இந்த இரண்டையும் கொடுக்க முடியாததால் அப்பெண்ணை கணவனும் மாமியாரும் அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள்.

 அந்தப் பெண்ணை அறைக்குள் அடைத்து வைத்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இருக்கிறார்கள்.  மகன்களுடன் அப்பெண்ணை வீட்டை வீட்டு துரத்தி இருக்கிறார்கள்.  திரும்பவும் அவர்கள் வீட்டுக்குள் வந்ததால் கொடுமை அதிகரித்திருக்கிறது.    அப்பெண்ணின் கணவர் அவரது உறவினரை சேர்த்துக்கொண்டு சொந்த  மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.  இதில் சுயநினைவை இழந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 இதையடுத்து கணவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.  தன்னிச்சையாக காயப்படுத்துதல்,  பாலியல் துன்புறுத்தல்,  கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.