கணவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மனைவியை புதருக்குள் இழுத்துச்சென்றவர்கள் சிக்கினர்

 
x

கணவன் குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற பெண்ணை துப்பாக்கி முனையில் முடக்கிய மர்ம நபர்கள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 மத்திய பிரதேச மாநிலத்தில் ராஜ்கர் மாவட்டத்தினைச் சேர்ந்த   கணவன்,  மனைவி குழந்தைகளுடன் அதே பகுதியில் சுற்றுலா தளத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காரில் சென்று இருக்கிறார்கள்.   சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு குடும்பத்துடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள் .  

p

 சுற்றுலா தளத்தில் இருந்து ரஹ்ஹோகர் என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் காரை வழியிலேயே  மறித்திருக்கிறார்கள். காரை நிறுத்தியதும் உடனே பஸ்சில் இருந்து இறங்கிய ஒருவர் துப்பாக்கியை காட்டி காரில் இருந்த பெண்ணையும் கணவனையும் கீழே இறங்கி இருக்கிறார்கள்.

இதையடுத்து  அந்த இருவரில் ஒருவன் அருகில் உள்ள புதர் பகுதிக்கு அந்த பெண்ணை இழுத்துச் சென்றதை பார்த்த கணவர் தடுக்க முயற்சிக்க இன்னொரு நபர் துப்பாக்கியை நெற்றிப்பொட்டில் வைத்து கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார்.   இதனால் கணவரால் எதுவும் செய்ய முடியாமல் போயிருக்கிறது.  இப்படியாக அந்த பணியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் இருவரும் பைக்கில் தப்பிச் சென்று இருக்கிறார்கள்.  பின்னர் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார்.

 புகாரினை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி எடுத்து வந்தார்கள்.  தீவிர தேடுதல் வேட்டையில் சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்தன இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.