காளி சிலையின் காலடியில் மனித தலை - அதிர்ச்சி வீடியோ

 
ka

காளி சிலையின் காலடியில் மனித தலை கிடந்ததால் நரபலி ஆக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

 தெலுங்கானா மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டம் அருகே அமைந்திருக்கிறது அந்த பிரசித்தி பெற்ற காளி கோயில்.   இந்த கோவிலில் உள்ள காளி சிலையின் காலடியில் நேற்று ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது.   பூஜை செய்ய வந்த பூசாரி இதை பார்த்துவிட்டு அதிர்ந்து போய் உடனே போலீசுக்கு தகவல் அளித்து இருக்கிறார்.

 தகவலறிந்து காளி கோயிலுக்கு விரைந்து வந்த போலீசார் காளிதேவி சிலையின் காலடியில் மனித சிலை வைக்கப்பட்டிருந்ததால் நரபலி ஆக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.  இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை, உயிரிழந்தவரின் அடையாளம் காண 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 

kali

 காளி கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் தேடியும் உடலின் மற்ற பாகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.   கொலை செய்யப்பட்ட அந்த நபருக்கு ஒரு முப்பது வயது இருக்கும் என்றும்,   அந்த நபர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு அவரது தலை இங்கு கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 சிசிடிவி காட்சிகள் மூலம் இதுவரைக்கும் எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும்,   சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உடலை தேடி வருவதாகவும்.  ஆனால் இதுவரைக்கும் கிடைக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர் .

கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் இந்த கொடூர குற்றத்தை செய்தவர்களை பிடிக்கவும் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.   கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை கண்டுபிடிக்க அந்த முகத்தை மட்டும் புகைப்படம் எடுத்து . வெளியிட்டிருக்கிறார்கள் போலீசார் இதற்கிடையில் காளி சிலையின் காலடியில் வைக்கப்பட்டிருந்த தலை குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.