கிரைண்டர் கல்லால் மனைவியை கொன்றுவிட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை

 
la

கிரைண்டர் கல்லைப்போட்டு மனைவியை கொலை செய்த பின்னர் அந்த வருத்தத்தில் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  ராமநாதபுரம் மாவட்டம் அடஞ்சேரிப் பகுதியில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.  

 அடஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் லாட முருகன் -முத்துலட்சுமி தம்பதி.   இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்திருக்கிறது.   இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.  

la

 அப்போது கடும் ஆத்திரத்தில் இருந்த லாடமுருகன் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை தூக்கி வந்து,   முத்துலட்சுமியின் தலையில் ஓங்கி அடித்து இருக்கிறார்.   இதில் அலறிக்கொண்டு ரத்த வெள்ளத்தில் விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார் முத்துலட்சுமி.  

 தன் கண்முன்னே அதுவும் தான் அடித்ததால் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்த மனைவியை பார்த்து மனம் உருகி அழுதிருக்கிறார் முருகன்.   உடனே அவர் மனைவியை கொன்றுவிட்டோமே என்ற மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.   அதனால் உடனே அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

la

 கொலை,  தற்கொலை பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.   பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியபோது குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது . 

முருகன் தற்கொலையும் முத்துலட்சுமி கொலையும் அடஞ்சேரிப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.