கள்ளக்காதலால் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

 
h

 கள்ளக்காதல் விவகாரத்தால் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.    இந்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்திருக்கும் போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

 நாகர்கோவிலை அடுத்த குஞ்சன்விளை வைகுண்டர் வீதியைச் சேர்ந்தவர் தங்க கிருஷ்ணன்.  43 வயதான இந்த வாலிபர் மீது கொலை வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 கன்னியாகுமரி மாவட்ட ரவுடிகள் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றிருக்கிறது.   சேலத்தில் கார் டிரைவராக இருந்து வந்தார்.   இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக ஊருக்கு வந்திருந்த போது நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீட்டிற்கு சென்றிருந்தார்.   அப்போது  மது அருந்துவதற்காக நண்பர்கள் அழைத்து சென்றிருக்கிறார்கள்.  

mm

நண்பர்களுடன்  மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கூலிப்படையினர் தங்ககிருஷ்ணனை சரமாரியாக வெட்ட, அவர் தப்பி ஓட, ஓட ஓட விரட்டி கொலை செய்திருக்கிறார்கள்.  பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்கள்.

தங்ககிருஷ்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி  போலீசாருக்கு தெரியவர,  அவர்கள் விரைந்து வந்து தங்ககிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

 தங்ககிருஷ்ணன் படுகொலை தொடர்பாக அவரது தந்தை சுந்தர மகாலிங்கம் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.   புகாரின் பேரில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.   தனிப்படையினர் தீவிர விசாரணையில் கள்ளக்காதல் ,  முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.  

 இதையடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.   கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் தற்போது தங்ககிருஷ்ணனை தீர்த்துக் கட்டியதாக  தெரிவித்திருக்கிறார் சுதன். 

 கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.