காதலர்களின் சடலங்களை போலீசாருக்கு தெரியாமல் புதைக்க நடந்த ஏற்பாடு

 
r

 காதலை பெற்றோர் ஏற்காததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள காதலி இறந்த செய்தி கேட்டு மனமுடைந்த காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்திருக்கிறது.   அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்த இவர்களின் அடுத்தடுத்த மரணங்கள் வேலம்புதூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 ராணிப்பேட்டை மாவட்டம் புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி இவரது 18 வயது மகள் சந்தியா மேலும் புதூர் கிராமத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.     இவரது வீட்டிற்கு இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கதிர்வேல் என்கிற 24 வயது இளைஞர் கேட்டரிங் படித்து விட்டு வெளிநாட்டில் வேலை புரிந்து வந்திருக்கிறார்.  

ra

 இருவரும் கடந்து சில ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள்.   சந்தியாவை திருமணம் செய்து கொள்வதாக அவரின் பெற்றோரிடம் கதிர்வேல் பேசியிருக்கிறார். ஆனால் சந்தியாவின் பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.   அதோடு சந்தியாவையும் கதிர்வேலையும்  இனி பழகக் கூடாது பேசக்கூடாது என்று கண்டித்திருக்கிறார்கள்.

 இதனால் மனமுடைந்த சந்தியா வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் மன உளைச்சல் அடைந்திருக்கிறார்.   இந்த நிலையில் திடீரென்று வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.   இந்த செய்தியை கேட்ட காதலன் கதிர்வேல் நீலகண்ட ராயபுரம் கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 இருவீட்டாரும் போலீசாருக்கு தெரியாமல் சடலங்களை புதைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.   ஆனால் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைக்கவும் ராணிப்பேட்டை போலீசார் இருவரின் சடலங்களை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.  இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.