மனைவி, மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வாலிபரும் தற்கொலை

 
ke

மனைவி, மகன் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அந்த வாலிபர். 

 கேரள மாநிலத்தில் கொனி நகரம் பயனமெனில் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சோனி சக்கரியா- ரீனா.    இத்தம்பதிக்கு குழந்தையில்லை என்பதால் ரியான் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

ke2

 சக்கரியா குவைத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.   அங்கு அவருக்கு விபத்து ஏற்பட திடீரென்று குவைத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருக்கிறார்.  சொந்த ஊரில் அவருக்கு போதிய வருமானம் இல்லாததால் கடன் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.   இதனால் விரக்தி அடைந்த சோனி சக்கரியா உறவினர்கள் நண்பர்களிடம் பேசாமல் அவர்களிடம் இருந்து விலகியே இருந்து வந்திருக்கிறார் .  மனைவியையும் மகனையும் உறவினர்கள் நண்பர்கள் யாரிடமும் பேசக்கூடாது என்று கண்டித்து வைத்திருந்திருக்கிறார்.   மேலும் மேலும் கடன் தொல்லை அதிகரிக்கவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சக்கரியா மனைவி மகனை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறார்.

 இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று மனைவி, மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த சோனி சக்கரியா, தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.   உறவினர்கள் யாரிடமும் பேசாமல் எழுந்திருக்கிறது.   

இந்த  நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை உறவினர் ஒருவர் பேசியிருக்கிறார் . அதன்பின்னர் யாரும்  போனை எடுக்காததால் உறவினர்களுக்கும் சந்தேகம் இருந்து இருக்கிறது.

so

 கடந்த சனிக்கிழமை முதல் வீடு பூட்டிக் கிடந்ததால் அக்கம்பக்கத்தினருக்கும் சந்தேகம் வந்திருக்கிறது.   அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்கவும் போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் ரீனாவும் மகனும் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த இருக்கிறார்கள்.  மற்றொரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தது இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

 மூன்று பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   கடன் நெருக்கடியால்,  தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த கொலையும் தற்கொலையும் நடந்துள்ளனவா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.