கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் மீது ஆசிட் வீச்சு

 
கொ

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் மீது மர்ம நபர் ஆசிட் வீசி விட்டுச் சென்றதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.   

தர்மபுரியை சேர்ந்த ஸ்டாலினுக்கு ராதா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.    ஸ்டாலினுக்கும் -ராதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவரை பிரிந்து அவர் கோவையில் வந்து தனியாக வாழ்ந்து வருகிறார் .  கடந்த 8 மாதங்களாக கோவையில் அம்மன் குளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.

 நேற்று மாலையில் வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்.   அப்போது தனது வீட்டு அருகே உள்ள மளிகை கடைக்கு  பால் வாங்குவதற்காக சென்றிருக்கிறார். பால் வாங்கி விட்டு பின்னர் வீட்டிற்கு நடந்து சென்றிருக்கிறார்.

கோ

 வீட்டின் அருகே சென்ற போது இரு இருட்டு நேரம் என்பதால் ஒரு பகுதியிலிருந்து ஒளிந்திருந்த மர்மநபர் ஒருவர் திடீரென்று ஓடிவந்து ராதாவின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பி ஓடியிருக்கிறார் .   இருட்டு நேரத்தில் அந்த நபர் யார் என்பது தெரியவில்லை. 

 ஆசிட் வீசியதில் ராதாவின் இடது பக்கம் முகம்,  தோள்பட்டை,  இடது கை முழுவதும் காயம் ஏற்பட்டிருக்கிறது.   அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

 சம்பவம் குறித்து அறிந்த கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதா மீது ஆசிட் வீசி தப்பிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.