அந்த ஆபாச வீடியோவில் பார்த்த பெண் உன்னை மாதிரியே இருக்குறா? சந்தேகத்தில் மனைவி குத்திக்கொலை

 
xக்ஷ்

செல்போனில் பார்த்த அந்த ஆபாச வீடியோவில் இருந்தது உன்னை மாதிரியே இருந்தது என்று மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன் குழந்தைகளின் கண் முன்பாகவே குத்தி மனைவியை கொலை செய்திருக்கிறார்.    கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 பெங்களூருவில் வசித்து வந்தவர் காதர்பாஷா.   இவரின் மனைவி முபீனா.  தம்பதிக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றன.   இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் ஜாகிர் பாஷா,   செல்போனில் ஆபாச படங்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் பார்த்த அந்த ஆபாச வீடியோவில் இருந்த பெண் தன்  மனைவியைப் போலவே இருந்திருக்கிறார் .

ச்

இதனால் அவருக்கு மனைவி மீது சந்தேகம் வந்திருக்கிறது.  இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறு இருந்து வந்திருக்கிறது.   கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உறவினர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது மனைவியை  இதே விவகாரத்தில் கடுமையாகத் தாக்கி இருக்கிறார்.  இந்த விவகாரம் உறவினர்கள் அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது.  இதையடுத்து அனைவரும் பாஷாவை கண்டித்து அனுப்பியிருக்கிறார்கள்.

தொடர்ந்து இந்த விவகாரம் பெரிதாகி வந்ததால் வீட்டை ராமாநகருக்கு மாற்றியிருக்கிறார் காதர் பாஷா.   அங்கேயும் காதர்பாட்சா மனைவியிடம் இது குறித்து கேட்டு சண்டை போட்டு வந்திருக்கிறார். 

 இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் அந்த வீடியோவில் இருந்த பெண் நீதானே என்று கேட்டு தகராறு செய்ய,  மனைவி ஆத்திரமாக திட்ட உடனே கோபப்பட்ட காதர் பாஷா,  கத்தியை எடுத்து குத்தியிருக்கிறார்.  வீட்டில் இருந்த ஐந்து குழந்தைகளும் அதிர்ச்சியில் இதை பார்த்துக் கொண்டிருக்க,  குழந்தைகள் கண் முன்பாகவே முபீனாவை சரமாரியாக குத்தி கீழே தள்ளி இருக்கிறார்.

 அதை பார்த்துவிட்டு மூத்தமகன் ஓடிச்சென்று தாத்தாவிடம் கூறியிருக்கிறார் மூத்த மகன்.   தன் கத்தியால் குத்தப்பட்டதை அறிந்த முபீனாவின் தந்தை ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார்.   இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும்  போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.   பாட்ஷாவை போலீசார் கைது செய்துள்ளனர்.   

 ஆபாச வீடியோவில் பார்த்த பெண் மனைவிதான் என்று சந்தேகப்பட்டு அவரை கொலை செய்தது பெங்களூரு மற்றும் ராம் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.