18 நாட்கள் 3 பேர் - நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

 
r

நீட் தேர்வுக்கு படித்து வந்த 18 வயதுடையை அந்த  இளம்பெண்ணை 18 நாட்கள் அடைத்து வைத்து மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 குஜராத் மாநிலத்தில் பொடாட் மாவட்டத்தில் 18 வயது பெண் ஒருவர் மூன்று பேர் தன்னை கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் டிசம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் இருபத்தி ஆறாம் தேதி வரைக்கும் 18 நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தார்கள் என்று மூன்று பேர் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரின் அடிப்படையில் 3 பேரையும் கைது செய்துள்ளனர் போலீசார்.  கைது செய்யப்பட்ட 3 பேரும் 22 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள்.

b

அந்தப் பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்த பண்ணை வீடு,  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூவரில் ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்திருக்கிறது. நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று அந்த பண்ணை வீட்டிற்கு கடத்திச் சென்றிருக்கிறார்கள்.  மூன்று பேரும் மது அருந்திவிட்டு  மாறி மாறி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.  டிசம்பர் இருபத்தி ஆறாம் தேதி அன்றுதான் அந்த பெண்ணை பண்ணை வீட்டில் இருந்து விடுவித்து இருக்கிறார்கள்.

 அதன் பின்னர் ஜாம் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.  அவர்களிடம் தனக்கு நடந்த கொடுமைகளை சொல்ல,  அவர்கள் தான் ஜாம் நகர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.   போலிஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள்.  குற்றவாளிகள் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர் தற்போது அவர்கள் போலீஸ் காவலில் உள்ளார்கள்.  மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மகளிர் போலீசார் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.  

ராஜ்கோட்டில் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவிக்கு ஏற்பட்ட இந்த நிலைமை குஜராத் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.