குழந்தைகளுக்கு பிடித்த போர்போன் குழி பணியாரம்

 

குழந்தைகளுக்கு பிடித்த போர்போன் குழி பணியாரம்

இந்த லாக்டவுன் நேரத்தில் குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் கொடுத்து போரடித்து விட்டதா.. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த போர்போன் மற்றும் டைரி மில்க் சாக்லேட்டை வைத்து பதினைந்தே நிமிடத்தில் மிகவும் எளிமையான ருசியான இந்த போர்போன் குழி பணியாரத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்…

குழந்தைகளுக்கு பிடித்த போர்போன் குழி பணியாரம்

தேவையான பொருட்கள்
போர்போன் பிஸ்கட் : 15 

பால் : அரை கப் 

பேக்கிங் சோடா : 1 சிட்டிகை 

எண்ணெய் : தேவையான அளவு 

10 ரூபாய் டைரி மில்க் : 2 

வெனிலா எசென்ஸ் : 1 டீஸ்பூன் 

குழந்தைகளுக்கு பிடித்த போர்போன் குழி பணியாரம்

செய்முறை

  • போர்போன் பிஸ்கட்யை உடைத்து  மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்து கொள்ளவும் .
  • பொடியாக்கப்பட்ட போர்போன் பிஸ்கட்யை ஒரு பாத்திரத்தில் மாற்றி ,அத்துடன் பால் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலக்கவும். 
  • இத்துடன் பேக்கிங் சோடா மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பணியார கல் சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு, கலக்கி வைத்துள்ள மாவை ஊற்றவும். 
  • இப்போது பணியாரத்தின் நடுவில் ஒரு பீஸ் டைரி மில்க் சாக்லேட்டை துருவி  சேர்க்கவும் .
  • இரண்டு பக்கமும் நன்றாக வெந்தவுடன் எடுத்து தட்டில் வைத்து சூடாக பரிமாறவும் 

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த போர்போன் குழி பணியாரம் தயார் !!!