குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மொறு மொறு பன்னீர் கட்லெட்

 

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மொறு மொறு பன்னீர் கட்லெட்

மாலை நேர ஸ்நாக்ஸ் என்றால் நமக்கு முதலில் தோன்றுவது கட்லெட் தான்…. வெஜிடபிள் கட்லெட் , சிக்கன் கட்லெட் , மட்டன் கட்லெட் ,பன்னீர் கட்லெட் , பீட்ரூட் கட்லெட் என்று கட்லெட்டில் பல வகைகள் உள்ளன . அதில் பன்னீர் கட்லெட் மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் பிடிக்கும். 20 நிமிடத்தில் ஈசியாக இந்த பன்னீர் கட்லெட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மொறு மொறு பன்னீர் கட்லெட்

தேவையான பொருட்கள்
பன்னீர் – 1 பாக்கெட்,  உருளைக்கிழங்கு – 4 (பெரியது ), பச்சை மிளகாய் – 3,  கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்,  கருவேப்பிலை , கொத்தமல்லி – சிறிது,  மைதா மாவு – 1/2 கப்,  ரஸ்க் தூள் – 1 கப், உப்பு – தேவையான அளவு 

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மொறு மொறு பன்னீர் கட்லெட்

செய்முறை

  • பன்னீரை துருவிக் கொள்ளவும் . உருளைக்கிழங்கை சிறிது உப்பு போட்டு அவித்து உரித்து மசித்து கொள்ளவும் .
  • பச்சைமிளகாயை நைசாக நறுக்கி போட வேண்டும் . கருவேப்பிலை , கொத்தமல்லி நறுக்கி போட்டு கரம் மசாலாத்தூள் , உப்பு இவை எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து குழந்தைகளுக்கு பிடித்த வடிவத்தில் தட்டி ( மைதா மாவை பஜ்ஜி மாவு பக்குவத்தில் சிறிது உப்பு போட்டு கரைத்து ) மைதா மாவில் நனைத்து ரஸ்க் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன் நிறமாக வெந்தவுடன் எடுக்க வேண்டும் .

சூடான ருசியான மொறு மொறு பன்னீர் கட்லெட் தயார் !!!!