Home Pongal 2021 பொங்கல் திருநாள்... சூரியனை வழிபடுவது எப்படி!

பொங்கல் திருநாள்… சூரியனை வழிபடுவது எப்படி!

உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. பொங்கலுக்கு முதல் நாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப தமிழகம் முழுக்க போகி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், புது பானை, பச்சரிசி, வெள்ளம், கரும்பு. மஞ்சள் கிழங்குடன் கூடிய செடி உள்ளிட்டவை விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பொங்கல் வைக்க சிறந்த நேரம் என்ன என்பது பற்றி கட்டுரை வெளியிட்டிருந்தோம். பொங்கல் பண்டிகையின் போது செய்ய வேண்டியவை பற்றி இப்போது காணலாம்.

பொங்கல் பண்டிகையையொட்டி அதிகாலை எழுந்து நீராட வேண்டும். தீபாவளி பண்டிகையைப் போல எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பது போன்று எந்த ஐதீகமும் இல்லை. காலையில் குளித்து முடித்து குறித்து கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில் பொங்கல் வைக்க வேண்டும்.

கிராமங்களில் பொங்கல் வைக்க உள்ள இடத்தை பசு சானத்தால் மொழுகி தூய்மை செய்து, கோலம் இட்டு தயார் செய்வார்கள். நகரத்தில் அதற்கு வாய்ப்பில்லை. எனவே, முடிந்தவர்கள் பசு சாணத்தால் மொழுகலாம். மற்றவர்கள், பொங்கல் வைக்க உள்ள இடத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து, மாக்கோலம் இட்டு அலங்கரிக்கலாம்.

பானையின் மீது வாங்கி வந்த மஞ்சள் இலையைக் கட்ட வேண்டும். புதுப் பானை மீது நாமே வர்ணம் தீட்டி அழகுபடுத்தலாம்.

சூரியன் உதிக்கும் கிழக்கு முகமாக பொங்கல் பானை வைத்து பொங்கல் செய்ய வேண்டும்.  பானையில் முதலில் பாலும், தண்ணீரும் இட்டு தயாராக வைக்க வேண்டும். கற்பூரம் கொண்டு பொங்கல் பானைக்கு ஆரத்தி எடுத்து அதைக் கொண்டு அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும். இஷ்ட தெய்வத்தை வணங்கியபடி பானையை அடுப்பில் வைக்க வேண்டும். 

பிறகு, பச்சரிசி, வெள்ளம் உள்ளிட்டவற்றைப் போட்டு பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று கூறி சூரியனை வழிபடுவது நல்லது.

பொங்கல் சமைத்ததும் தலைவாழை இலையில் இட்டு, அதனுடன் கரும்பு, பழம் உள்ளிட்டவற்றை வைத்து சூரியனுக்குப் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த நேரத்தில், சூரியனை வழிபட 108 போற்றி மந்திரத்தை சொல்லலாம்.

கச்சபேச்வரர் கோவிலில் உள்ள சூரியன் சன்னிதியில் பொறிக்கப்பட்டிருக்கும் மயூர சதகத்தில் உள்ள நூறு ஸ்லோகத்தைச் சொல்லலாம்.

அல்லது, கீழ்க் காணும் தமிழ் மந்திரத்தைச் சொல்லலாம்…

சீலமாய் வாழ சீரருள் புரியும்

ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி

சூரியா போற்றி சுந்தரா போற்றி

வீரியா போற்றி வினைகள் களைவாய்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள்… எல்லோருக்கும் இந்த தைப் பொங்கல் சிறப்பான தொடக்கமாக அமைய வாழ்த்துகிறோம்!

மாவட்ட செய்திகள்

Most Popular

விவசாயிகள், தொழிலாளர்கள் இந்திய குடியரசின் பலம்… விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு..

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள்தான் இந்திய குடியரசின் பலம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்தும் அவற்றை ரத்து செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-இடதுசாரிகள் தீவிரம்… முதல் கட்டமாக 77 தொகுதிகளுக்கு உடன்பாடு..

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 77 தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட காங்கிரஸ்-இடதுசாரிகள் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை...

கங்கனாவை சந்திக்க நேரம் இருக்கு.. விவசாயிகளை சந்திக்க அவருக்கு நேரமில்லை.. கவர்னரை தாக்கிய சரத் பவார்

கங்கனாவை சந்திக்க நேரம் இருக்கு, ஆனால் விவசாயிகளை சந்திக்க அவருக்கு நேரமில்லை என்று மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சரத் பவார் விமர்சனம் செய்தார்.

குவிந்தது வர்த்தக ஒப்பந்தம்… எல் அண்டு டி நிறுவனத்துக்கு ரூ.2,467 கோடி லாபம்…

2020 டிசம்பர் காலாண்டில் எல் அண்டு டி நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,467 கோடி ஈட்டியுள்ளது. அடிப்படை கட்டமைப்பு துறையில் மிகப்பெரிய நிறுவனமான...
Do NOT follow this link or you will be banned from the site!