பொங்கல் வைக்க உகந்த நேரம் எது தெரியுமா?

 

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது தெரியுமா?

மார்கழியின் கடைசி நாளுக்கு வந்துவிட்டோம். விடிந்தால் போகி பண்டிகை. வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருட்களை வெளியே போட்டு எரித்து, வீட்டையும், உள்ளத்தையும் சுத்தம் செய்யும் ஆயத்த நாள். அடுத்த நாள் பொங்கல்.

இன்றைய தினத்தில் வீட்டில் உள்ள பழைய பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பாய், போர்வை, தலையணை, துடைப்பம் உள்ளிட்டவற்றை போட்டு எரிப்பது நல்லது. பிளாஸ்டிக், டயர் போன்றவற்றை எரிக்க வேண்டாம்.

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது தெரியுமா?

போகி பண்டிகை விவசாயத்துக்கு தேவையான மழையைக் கொடுத்த இந்திரனுக்கான நாள். இன்றைய தினம் காப்பு கட்டுவது கிராமங்களில் வழக்கம்.

நம்முடைய உள்ளமும், இல்லமும் தயாரான பிறகு தை 1ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளோம். பாராம்பரிய முறைப்படி புதிய மண் பானையில், மஞ்சள் கிழங்கைக் கட்டி, வெள்ளம், பச்சரிசி பொங்கலிட்டுக் கொண்டாடுவது சிறப்பு.

பொங்கல் எப்போது வைக்கலாம் என்று பலருக்கும் கேள்வி எழும். காலையிலேயே வழிபாட்டை நடத்த விரும்புகிறவர்கள் காலை 7.30 முதல் 9 மணிக்குள் பொங்கல் வைத்து கொண்டாடலாம். சற்று தாமதமாகக் கொண்டாட விரும்புகிறவர்கள், காலை 10.30  முதல் நண்பகல் 12 மணிக்குள் பொங்கல் வைத்துக் கொண்டாடலாம்.

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது தெரியுமா?

பொங்கல் வைத்து அது பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று குரல் எழுப்பி சூரியனை வணங்குவதன் மூலம் நன்மைகள் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

மாட்டுப்பொங்கல் தினத்தன்று காலை 9 முதல் 10.30க்குள் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். காணும் பொங்கலன்று காலை 7.30 முதல் 9 மணிக்குள் அல்லது காலை 10.30 முதல் 12 மணிக்குள் பொங்கல் வைத்து வழிபடலாம்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் காணும் பொங்கல் அன்று சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்வது நல்லது!