‘ஈஞ்சம்பாக்கத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பில் ரத்த சுத்திகரிப்பு நிலையம்’ அமைச்சர் வேலுமணி

 

‘ஈஞ்சம்பாக்கத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பில் ரத்த சுத்திகரிப்பு நிலையம்’ அமைச்சர் வேலுமணி

கொரோனா நோய்த் தொற்று இந்தியா முழுவதுமே வேகமாக பரவிவருகிறது. தமிழகத்திலும் தினமும் சுமர் 4000 கொரோனாவால் புதிய பாதிப்பாளர்கள் எண்ணிக்கை கூடுகிறது. இதனால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புதிய மருத்துவ நிலையங்கள் உருவாக்கப்படுவது நடந்துவருகிறது. சென்னையில் நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் உள்ளிட்ட பல மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பால் நீரிழிவு நோய் போன்ற வழக்கமாக சிகிச்சை எடுத்துக்கொள்வோர்க்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலைப் பலரும் ஊடகம் வழியாக பகிர்ந்துவருகின்றனர். அதற்கான தீர்வுகளை அரசும் அவ்வப்போது எடுத்து வருகிறது.

‘ஈஞ்சம்பாக்கத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பில் ரத்த சுத்திகரிப்பு நிலையம்’ அமைச்சர் வேலுமணி

இந்நிலையில் சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாடுக்கு தொடங்கியுள்ளதாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் மாண்புமிகு முதல்வரின் உத்தரவின்படி சோழிங்கநல்லூர் மண்டலம், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் ரூ. 1 கோடி மதிப்பில் 10 படுக்கை வசதிகளுடன் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
#Chennai #Dialysis

இதன்மூலம் அந்தப் பகுதியின் நீரிழிவு உள்ளிட்ட நீண்டகாலம் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.