×

தீக்கிரையானாலும் குறையாத கம்பீரம்; பாரீஸ் நோட்ரா-டாம் தேவாலயத்தின் முதல் புகைப்படங்கள்!

புகழ்பெற்ற ஐரோப்பிய கோதிக் கட்டிடக்கலை (Gothic architecture) பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாலயமே, நகரின் முதன்மை தேவாலயம் ஆகும் பாரீஸ்: தீ விபத்துக்கு பின்னர் வானில் இருந்து எடுக்கப்பட்ட பாரீஸ் நோட்ரா-டாம் தேவாலயத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலகப்புகழ் பெற்ற நோட்ரா-டாம் தேவாலயம் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. புகழ்பெற்ற ஐரோப்பிய கோதிக் கட்டிடக்கலை (Gothic architecture) பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாலயமே, நகரின் முதன்மை தேவாலயம் ஆகும். ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாகவும்,
 

புகழ்பெற்ற ஐரோப்பிய கோதிக் கட்டிடக்கலை (Gothic architecture) பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாலயமே, நகரின் முதன்மை தேவாலயம் ஆகும்

பாரீஸ்: தீ விபத்துக்கு பின்னர் வானில் இருந்து எடுக்கப்பட்ட பாரீஸ் நோட்ரா-டாம் தேவாலயத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலகப்புகழ் பெற்ற நோட்ரா-டாம் தேவாலயம் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. புகழ்பெற்ற ஐரோப்பிய கோதிக் கட்டிடக்கலை (Gothic architecture) பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாலயமே, நகரின் முதன்மை தேவாலயம் ஆகும்.

ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாகவும், பிரான்சின் வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்து வரும் இந்த தேவாலயத்திற்கு, ஆண்டொன்றுக்கு மதபேதமின்றி சுமார் ஒரு கோடிக்கும் மேலான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இதன் அழகையும், பழமையையும் ரசித்து செல்வதாக புள்ளி விவரங்கள் கூறும் இந்த 800 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், நோட்ரா-டாம் தேவாலயத்தில் நேற்று முன்தினம் மாலையில் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் மேற்கூரையில் ஏற்பட்ட தீ, கொஞ்சம், கொஞ்சமாக தேவாலயம் முழுவதும் பரவியது.

பின்னர் அருகில் இருந்த கோபுரத்தில் தீப்பற்றியது. மரச் சாமான்கள் மற்றும் ஈயத்தால் செய்யப்பட்டது என்பதால் தீ மளமளவென எரிந்து அந்தக் கோபுரம் சரிந்து விழுந்தது.

இந்த தீ விபத்தை கண்டு சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகின. இதனைக் கண்ட பொதுமக்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சுமார் 400 தீயணைப்பு வீரர்கள் 12 மணி நேர கடும் போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விலைமதிப்பில்லாத நினைவுச் சின்னங்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தீ விபத்துக்கு பின்னர் வானில் இருந்து எடுக்கப்பட்ட பாரீஸ் நோட்ரா-டாம் தேவாலயத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

லானா சாட்டர் எனும் பெண் புகைப்பட கலைஞர் முதன்முதலாக எடுத்த இந்த புகைப்படங்களை டெய்லி மெயில் எனும் பத்திரிகை வெளியிட்டுள்ளது. தீக்கிரையான போதிலும், கம்பீரமாக நிற்கிறது 800 ஆண்டுகள் பழமையான தேவாலயம்!!

இதையும் வாசிங்க

கொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா… இந்த சம்மருக்கு தேக்கடி போங்க