×

தீர்க்க தரிசியாக இருப்பதால் முதல்வரை ரோட்டரி சங்கம் கெளரவித்துள்ளது: அமைச்சர் உதயகுமார் புகழாரம்

அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரத்தை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் ‘the rotary foundation of rotary international’ என்ற அமைப்பு குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு “Paul Harris Fellow” என அழைத்து கெளரவப்படுத்திவருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி “Paul Harris Fellow” என கெளரவப்படுத்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் இது
 

அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரத்தை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் ‘the rotary foundation of rotary international’ என்ற அமைப்பு குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு “Paul Harris Fellow” என அழைத்து கெளரவப்படுத்திவருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி “Paul Harris Fellow” என கெளரவப்படுத்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் உதயகுமார், முன் மாதிரியாக இருந்து தீர்க்க தரிசனமாக முடிவுகளை எடுத்து வருவதாலேயே முதலமைச்சரை அமெரிக்காவில் உள்ள ரோட்டரி சங்கம் கெளரவித்துள்ளது என்றும் இதுவரை மாஸ்க் அணியாமல் பிடிவாதத்துடன் இருந்த டிரம்ப் கூட முகக்கவசம் அணிந்துள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.