நவம்பருக்குள் திறக்க வேண்டும்… அமெரிக்க பள்ளிகளுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!

நவம்பருக்குள் திறக்க வேண்டும்… அமெரிக்க பள்ளிகளுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!

அமெரிக்கப் பள்ளிகள் நவம்பருக்கு முன்னதாக திறக்காவிட்டால் அதற்கான நிதி உதவி துண்டிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கைவிடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பருக்குள் திறக்க வேண்டும்… அமெரிக்க பள்ளிகளுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!
உலக அளவில் கொரோனா தொற்று மற்றும் மரணத்தில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு ஒவ்வொரு நாளும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, 40, 50 ஆயிரம் என அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நவம்பர் மாதத்துக்குள் மாதத்துக்குள் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படாவிட்டால் பள்ளிகளுக்கு வழங்கப்படும் ஃபெடரல் நிதி நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

நவம்பருக்குள் திறக்க வேண்டும்… அமெரிக்க பள்ளிகளுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீடில், ‘ஜெர்மனி, டென்மார்க், நார்வே, சுவீடன் மற்றும் பல நாடுகளில் உள்ள பள்ளிகள் எந்த பிரச்னையும் இல்லாமல் திறக்கப்படுகின்றன. அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக பள்ளிகள் திறந்தால் அது அவர்களுக்கு அரசியல் ரீதியாக மோசமாக இருக்கும் என்று ஜனநாயக கட்சித் தலைவர்கள் கருதுவதால் பள்ளிகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பள்ளிகள் திறக்கப்படுவது குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் முக்கியமானது’ என்று கூறியுள்ளார்.