×

கொரோனா பாதிப்பு அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது ஏன்? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,103 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று ஆய்வு நடந்தது. அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் “மதுரையில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் இங்கு இதுவரை மதுரையில் இதுவரை 4,534 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்றார். அப்போது அவரிடம்
 

மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,103 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று ஆய்வு நடந்தது.

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் “மதுரையில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் இங்கு இதுவரை மதுரையில் இதுவரை 4,534 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்றார்.


அப்போது அவரிடம் கொரோனா பாதிப்பு அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது ஏன்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை என்பது அவரவர் விருப்பம். எம்எல்ஏ சதன் பிரபாகரர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளார். சிங்காநல்லூர் எம்எல்ஏ சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளார்’ என்று கூறினார்.