×

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை!

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக தற்போது ஆகஸ்ட் 31 வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த சமயத்தில் விநாயகரின் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 22 ஆம் தேதி வருகிறது. இது இந்துக்கள் அனைவரது வீட்டிலும் கொண்டாடப்படும் விழா என்பதால் விநாயகர் விழா கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக தற்போது ஆகஸ்ட் 31 வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த சமயத்தில் விநாயகரின் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 22 ஆம் தேதி வருகிறது.

இது இந்துக்கள் அனைவரது வீட்டிலும் கொண்டாடப்படும் விழா  என்பதால் விநாயகர்  விழா கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து வந்தன.

இந்நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ, ஊர்வலம் செல்வதற்கு தடை விதித்துள்ளது.  கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. பண்டிகை  பொருட்களை வாங்க கடைக்கு செல்வோர் கட்டாயம் சமூக இடைவெளியுடன் முக கவசம்  அணிந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.