விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடு… மும்பைவாசிகள் வேதனை!

 

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடு… மும்பைவாசிகள் வேதனை!

கொரோனா பாதிப்பு காரணமாக மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதற்கு மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடு… மும்பைவாசிகள் வேதனை!
இந்தியாவிலேயே மும்பையில்தான் விநாயகர் சதுர்த்தி ஊர்வலகங்கள் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படுகின்றன. மும்பையைப் பார்த்து மற்ற மாநிலங்கள், நகரங்களில் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் டி.ஜே இசை நிகழ்ச்சியோடு பிரம்மாண்டமாக நடத்தத் தொடங்கியுள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடு… மும்பைவாசிகள் வேதனை!
இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நான்கு அடிக்கு மேல் விநாயகர் சிலைகளை அமைக்கக் கூடாது. கடற்கரையில் இருந்து இரண்டு கி.மீ தொலைவுக்குள் உள்ள விநாயகர் சிலைகளை மட்டுமே கடலில் கரைக்க வேண்டும். மற்ற சிலைகளைக் கரைக்கத் தற்காலிக செயற்கை குளங்கள் 167 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது, அங்கு மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். விநாயகர் வழிபாடு நடத்த வரும் பக்தர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடு… மும்பைவாசிகள் வேதனை!
தற்போது அங்கு விடாமல் மழையும் பெய்து வரும் நிலையில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும் அரசின் இந்த உத்தரவுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் 2700க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்படுவது வழக்கம். இது தவிர ஆயிரக் கணக்கில் மக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்க கொண்டு வரப்படும். பெரும்பாலான மக்கள் அரசின் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடு… மும்பைவாசிகள் வேதனை!
வருடா வருடம் வித்தியாசமான முறையில் பிரம்மாண்ட விநாயகர் சிலையை அமைக்கும் கணேஷ் காலி கணோட்சவ் மண்டல் செயலாளர் சௌப்னில் பராப் கூறுகையில், “எங்கள் அமைப்பு தொண்டர்கள் மத்தியில் அரசின் அறிவிப்பு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இருப்பினும் தற்போதைய சூழலை உணர்ந்து இதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்த ஆண்டு அரசின் விதியை பின்பற்றுவோம். அடுத்த ஆண்டு எங்கள் கொண்டாட்டம் இரட்டிப்பாக இருக்கும்” என்றார்.
சில இந்து அமைப்புகள் அரசின் அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கொரோனா காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்தான். ஆனால், மக்கள் சிலை அமைக்க கட்டுப்பாடுகள் விதிப்பது சரியில்லை. மக்கள் அவர்கள் விருப்பம்போல சிலைகள் அமைத்தால் அரசு அதை எதிர்க்கக் கூடாது. அவர்களை அவர்கள் இஷ்டம் போல வழிபட அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் உடல் வெப்பநிலையை சரி பார்க்க வேண்டும், சுகாதாரமாக இருக்க வேண்டும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள் ஏற்புடையதுதான் என்கின்றனர்.