×

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி.!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் கணவர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மகன் மற்றும் மருமகன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி அவருடைய கணவர் மற்றும் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அவருடைய மகன் சையத் இத்ரீஸ் கபில் மற்றும் மருமகன் முகமது ஆசிப் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட
 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் கணவர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மகன் மற்றும் மருமகன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி அவருடைய கணவர் மற்றும் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அவருடைய மகன் சையத் இத்ரீஸ் கபில் மற்றும் மருமகன் முகமது ஆசிப் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், நிலோபர் கபீல் மகன், மருமகள் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதியானது. அமைச்சர் வீடு உள்ள கச்சேரி சாலையில் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மருத்துவமனையிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் வாணியம்பாடி நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் ஆக உள்ள காயத்ரி சுப்பிரமணி வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள வீட்டில் குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வந்த நிலையில் இன்று அவரது கணவர் கார்த்திகேயன் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டார். இந்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவரது குழந்தைகள் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.