திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் 15 பேருக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் பக்தர்கள்

 

திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் 15 பேருக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் பக்தர்கள்

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் அர்ச்சகர்களாக பணியாற்றி வரும் 15 அர்ச்சகர்கள் உள்பட 140 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக தேவஸ்தான அறங்காவல் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கடந்த ஜூன் 11ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் திருப்பதியில் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் திருப்பதி மாநகராட்சி பகுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, சில மணி நேரங்களில் திரும்பப் பெறப்பட்டது.

திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் 15 பேருக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் பக்தர்கள்நாளுக்கு நாள் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மத்தியில் கொரோனா அதிகரித்து வந்த நிலையில், 15 அர்ச்சகர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகி உள்ளதாகவும் மேலும் 25 அர்ச்சகர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவு வரவில்லை என்றும் செய்தி வெளியானது.

http://


இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “மொத்தம் உள்ள 50 அர்ச்சகர்களில் 15 பேருக்கு கொரோனா உறுதியானது உண்மைதான்.

திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் 15 பேருக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் பக்தர்கள்

இன்னும் 25 பேர் சோதனை முடிவுகள் வெளியாகவில்லை. 140 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் எந்த தடையும் இல்லை. மேலும் பல அர்ச்சகர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், பொது மக்கள் தரிசனத்துக்கு தடை விதிப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும்” என்றார்.