×

தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் ? : இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் அதை கட்டுப்படுத்தும் நோக்குடன் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி அறிவிப்பு வெளியாகிறது. முதல்வர் பழனிசாமி உடன் இன்று பிற்பகல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். இதனால் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை இன்று மாலை
 

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் அதை கட்டுப்படுத்தும் நோக்குடன் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி அறிவிப்பு வெளியாகிறது. முதல்வர் பழனிசாமி உடன் இன்று பிற்பகல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். இதனால் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை இன்று மாலை தமிழக அரசு வெளியிடும் என கூறப்படுகிறது.

தற்போது ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடு வர வாய்ப்புள்ளது. கொரோனா பரவலை தடுக்க கூட்டம் அதிகமாக உள்ள வார சந்தைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படக்கூடும் என்றும் முழு ஊரடங்காக அல்லாமல் பணி நேரம் குறைப்பு , பணியாட்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. அத்துடன் வீட்டிலிருந்தே பணியாற்றுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்படலாம் என்றும் மதவழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் அனுமதி ரத்து செய்யப்படலாம் கூறப்படுகிறது.