×

“மதவாத அமைப்புகளை  அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்” : மே 17 இயக்கம் கண்டனம்!

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து அப்பகுதியில் திக மற்றும் திமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணா போத்தனூர் போலீசில் சரணடைந்துள்ளார். இந்த விவாகரத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும்
 

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து அப்பகுதியில் திக மற்றும் திமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணா போத்தனூர் போலீசில் சரணடைந்துள்ளார். இந்த விவாகரத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெரியார் சிலை அவமதிப்பு குறித்து மே 17 இயக்கம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதில், “சகிப்புத்தன்மையற்ற கருத்தை கருத்தால் வெல்ல இயலாத கூட்டத்தின் இதுபோன்ற செயல்கள் தமிழ் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சி. தமிழ்நாட்டை சீர்குலைக்க முயலும் மதவாத அமைப்புகளை  அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.